நீர்மூழ்கி ஏவுகணையை பரிசோதித்த வடகொரியா: எச்சரிக்கையில் அண்டை நாடுகள்
பியாங்யாங் அணு ஆயுதச் சோதனைக்குத் தயாராகலாம் என்று அமெரிக்கா எச்சரித்த மூன்று நாட்களில் அதன் இரண்டாவது ஏவுகணை ஏவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
வட கொரியா சனிக்கிழமை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணையை ஏவியுள்ளதாக தென்கொரியா உறுதி செய்துள்ளது. பியாங்யாங் அணு ஆயுதச் சோதனைக்குத் தயாராகலாம் என்று அமெரிக்கா எச்சரித்த மூன்று நாட்களில் அதன் இரண்டாவது ஏவுகணை ஏவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2017-க்குப் பிறகு முதல் முறையாக முழு வீச்சில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுவது உட்பட 15 ஆயுத சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவின் புதிய அதிபராக யூன் சுக்-யோல் பதவியேற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சனிக்கிழமை இது நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
வடகொரியா அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கத் தயாராகி வருவதை செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை வெள்ளிக்கிழமை அன்று, இந்த மாத தொடக்கத்தில் அணுகுண்டு சோதனை நிகழக்கூடும் என்று எச்சரித்தது.
"எங்கள் இராணுவம் சுமார் 14:07 மணிக்குக்கு ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை தெற்கு ஹம்கியோங்கின் கடற்பகுதியில் இருந்து ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்தது" என்று சியோலில் இருந்து வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஹம்கியோங்கின் சின்போ எனப்படும் வட கொரியாவின் மிகப்பெரிய கடற்படை கப்பல் கட்டுமானத்தளம். செயற்கைக்கோள் புகைப்படங்கள் இந்தப்பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல்களின் தடத்தைக் காட்டியுள்ளன. ஜப்பானின் கடலோர காவல்படை, அதன் பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலை மேற்கோள் காட்டி, வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கக்கூடிய ஒரு பொருளை ஏவியது என உறுதிசெய்துள்ளது. இதனை அடுத்து அண்டை நாடுகள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அது தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மிக அண்மையில்தான் கிம் ஜாங் உன், தனது ஏவுகணை தொடர்பான ப்ரோமோ வீடியோ ஒன்றை ரிலீஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.