Trump Machado: “அவங்க குடுக்கலைன்னா என்ன சார், நான் தர்றேன்“; ட்ரம்ப்புக்கு கிடைத்த உண்மையான நோபல் பரிசு
ஒரு குழுவின் அங்கீகாரத்தை விட, மக்களின் அங்கீகாரம் பெரியது என்று சொல்வார்கள். அது போல் ஒரு அங்கீகாரம் அமெரிக்க அதிபருக்கு கிடைத்துள்ளது. ஆம், நோபல் பரிசை அவருக்கு அர்ப்பணிப்பதாக மரியா அறிவித்துள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்பிய நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்கு கிடைத்தது. இந்நிலையில், அந்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு அர்ப்பணிப்பதாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
மரியா கொரினா மச்சாடோ தெரிவித்திருப்பது என்ன.?
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தனது அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா மக்களுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் அர்ப்பணித்தார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "இந்தப் பரிசை வெனிசுலாவின் துன்பப்படும் மக்களுக்கும், எங்கள் நோக்கத்திற்கு உறுதியான ஆதரவை வழங்கிய ஜனாதிபதி டிரம்பிற்கும் அர்ப்பணிக்கிறேன்!" என்று கூறியுள்ளார்.
மேலும், "நாங்கள் வெற்றியின் வாசலில் இருக்கிறோம், இன்று, எப்போதையும் விட அதிகமாக, சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் அடைவதற்கு அதிபர் டிரம்ப், அமெரிக்க மக்கள், லத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் உலக ஜனநாயக நாடுகளை எங்கள் முக்கிய கூட்டாளிகளாக நம்புகிறோம்," என்றும் அவர் கூறியுள்ளார் .
This recognition of the struggle of all Venezuelans is a boost to conclude our task: to conquer Freedom.
— María Corina Machado (@MariaCorinaYA) October 10, 2025
We are on the threshold of victory and today, more than ever, we count on President Trump, the people of the United States, the peoples of Latin America, and the democratic…
சர்வாதிகார இடதுசாரி அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தேர்தல்களுக்குப் பிறகு, மச்சாடோ கடந்த ஒரு வருடமாக வெனிசுலாவில் தலைமறைவாக இருந்து வருகிறார். தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்த மச்சாடோ, தனக்கு பதிலாக முன்னாள் ராஜதந்திரி எட்முண்டோ கோன்சலஸ் உருட்டியாவுக்காக பிரசாரம் செய்தார். சர்வதேச சமூகத்தின் பெரும்பகுதியினரால் அவர்தான் சரியான வெற்றியாளராகக் கருதப்பட்டார்.
வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கும் அவர் மேற்கொண்ட போராட்டத்திற்கும், நோபல் குழு அவரது அயராத உழைப்பை பாராட்டியது.
வெனிசுலாவில் ஜனநாயக மாற்றத்தை நோக்கிய "தேவையான நடவடிக்கையாக", வெனிசுலா அருகே ஒரு பெரிய அமெரிக்க கடற்படை நிலைநிறுத்தம் உட்பட, மதுரோ மீதான ட்ரம்ப்பின் தொடர்ச்சியான ராணுவ அழுத்த பிரசாரத்தை 58 வயதான மச்சாடோ ஆதரித்துள்ளார்.
தனது நோபல் பரிசை ட்ரம்ப்பிற்கு அர்ப்பணிக்கும் மச்சாடோவின் எக்ஸ் தள பதிவை, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பான கரோலின் லீவிட் தனது X கணக்கில் பகிர்ந்துள்ளார்.
Nobel Peace Prize Winner Maria Corina Machado Dedicates Award To Donald Trumphttps://t.co/L3NaXLYvL5
— Karoline Leavitt (@PressSec) October 10, 2025





















