ஆன்லைனில் கணவனை ஏலம்விட்ட நியூசிலாந்து பெண்... இதுக்குப்பிறகு நடந்த அதிசயம் தெரியுமா மக்களே
நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனை இணையதளம் மூலம் விற்பனைக்கு முயன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
![ஆன்லைனில் கணவனை ஏலம்விட்ட நியூசிலாந்து பெண்... இதுக்குப்பிறகு நடந்த அதிசயம் தெரியுமா மக்களே New Zealand woman tried to sell her husband through the internet an adorable twist ஆன்லைனில் கணவனை ஏலம்விட்ட நியூசிலாந்து பெண்... இதுக்குப்பிறகு நடந்த அதிசயம் தெரியுமா மக்களே](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/04/d777ee703118f491512e038f6f13db22_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொரோனா பரவலுக்கு பின் பலரும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக தொழில் தொடங்கி சேலை முதல் உணவு, பெண்களின் அலங்கார பொருட்கள் என பலவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஆன்லைன் தொழிலில் அதிகப்படியாக வீட்டில் இருக்கும் பெண்களே களமிறங்கி கலக்கி வருகின்றனர்.
பொருட்கள் விற்பனைக்கு அதிகப்படியாக ஆன்லைன் பயன்படுத்தும் இந்த காலத்தில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனை விற்பனைக்கு முயன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழந்தைகளின் தாயான லிண்டா மெக்அலிஸ்டர், தனது கணவர் ஜான் மெக்அலிஸ்டரை ஏல தளத்தில் 'டிரேட் மீ பாஃர் சேல் என்று குறிப்பிட்டு விற்பனை செய்துள்ளார்.
அதில், எனது கணவரின் பெயர் ஜான் மெக்அலிஸ்டர், வயது 37, அவரது உயரம் 6’1. விவசாயி தொழில் மேற்கொண்டு வரும் எனது கணவர் ஜானுக்கு, படம் பிடிக்கவும், மீன் பிடிக்கவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், எனது கணவனுக்கு எவ்வளவு தூரம் விலை அதிகமாக ஏலம் எடுக்க விரும்புறீர்களோ, அவ்வளவு எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அந்த இணையதளத்தில் தெரிவித்தார்.
இதனை உண்மை என நம்பிய 10 பெண்களுக்கு மேற்பட்டோர் ஜானை வாங்க போட்டிப்போட்டு ஏலம் எடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்திய மதிப்பில் 7, 500 ரூபாய் கடந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த லின்டா, உடனடியாக அவர் பதிவிட்ட போஸ்ட்டை நீக்கியுள்ளார்.
இதுகுறித்து லிண்டா தெரிவிக்கையில், என் கணவர் ஜான் அடிக்கடி என்னையும் என் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு தனியாக மீன் பிடிக்க சென்றுவிடுகிறார். இரண்டு நாள் முதல் மூன்று நாள் வரை அவர் திரும்பி வருவதில்லை. அப்படி சில நாட்களுக்கு முன்பு, மீன் பிடிக்க சென்றுவிட்டார். அந்த கோபத்தில்தான் விளையாட்டாக என் கணவனை ஆன்லைனில் விற்பதாக பதிவிட்டேன் என்று தெரிவித்தார்.
அந்த ஏல தளத்தின் கொள்கை மற்றும் இணக்க மேலாளர் ஜேம்ஸ் ரியான் கூறுகையில், என் வாழ்நாளில் தனது கணவனை ஒரு பெண் ஆன்லைனில் விற்பனைக்கு முயற்சி செய்தது இதுவே முதல்முறை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)