New Year 2024: முத்து முத்தாய் அடி எடுத்து வைக்கிறது புத்தாண்டு.. எந்த நாட்டில் முதலிலும், கடைசியாக பிறக்கிறது தெரியுமா..?
இங்கிலாந்தில் மிகப்பெரிய திருவிழாக்களாக கொண்டாடப்படும் புத்தாண்டானது இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கு கொண்டாடப்படும்.
இன்னும் சில மணிநேரங்களில் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. புத்தாண்டு என்பது ஒரு வருடத்தின் முடிவையும், மற்றொன்றின் தொடக்கத்தையும் கொண்டாடும் சிறப்பான நாள். புத்தாண்டு பிறக்கும்போது வானவேடிக்கைகள், விருந்துகள் என மக்கள் புது ஆண்டை உற்சாகமாக வரவேற்பர். பல நாடுகளில் வரவிருக்கும் ஆண்டிற்கான புதிய தீர்மானங்களை மனதில் எடுத்துக்கொண்டு பாரம்பரியமாக புத்தாண்டு கொண்டாடப்பட இருக்கிறது.
2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தை நாம் ஒட்டுமொத்தமாக கொண்டாடினாலும், பல நாடுகளை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை. ஒரு சில நாடுகள் மிகவும் முன்னாடியே புத்தாண்டை வரவேற்கின்றன, ஒரு சில நாடுகள் மிகவும் நேரம் கடந்தே புத்தாண்டை கொண்டாடுவர். அப்படி இருக்க எந்தெந்த நாடுகள் முதல் முதலாக புத்தாண்டை கொண்டாடுகிறது என்ற முழு விவரத்தை இங்கு பார்க்கலாம்..
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா, கிரிபாட்டி நாடுகளில் முதன் முதலாக 2024 புத்தாண்டு பிறக்கிறது. அதாவது, அந்த நாடுகளில் அந்த நேரத்தில் 2024 ஜனவரி 1 அதிகாலை 12 மணி ஆகிவிடுகிறது.
இங்கிலாந்தில் மிகப்பெரிய திருவிழாக்களாக கொண்டாடப்படும் புத்தாண்டானது இந்திய நேரப்படி நாளை காலை, 5.30 மணிக்கு கொண்டாடப்படும். அதேபோல், இந்திய நேரப்படி ஜனவரி 1ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கனடா, அமெரிக்காவில் புத்தாண்டு பிறக்கிறது. தொடர்ந்து, நாளை மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடாக பேக்கர் தீவு பகுதி இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தீவுகளிலேயே கடைசியாக புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த நாடுகளைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் புத்தாண்டு பிறக்கும் நேரம் என்ன என்பதை நேர கணக்கீடுபடி பார்க்கலாம்.
இந்திய நேரப்படி எங்கெங்கு, எப்போது புத்தாண்டு கொண்டாடப்படுகிறது..?
- கிரிபதி - டிசம்பர் 31, மதியம் 3:30 மணி
- நியூசிலாந்து – டிசம்பர் 31, மாலை 4:30 மணி
- ஆஸ்திரேலியா - டிசம்பர் 31, மாலை 6:30 மணி)
- ஜப்பான், தெற்கு மற்றும் வட கொரியா - இரவு டிசம்பர் 31, 8:30 மணி
- சீனா, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், பிலிப்பைன்ஸ் - டிசம்பர் 31, இரவு 9:30 மணி
- தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா - டிசம்பர் 31, இரவு 10:30 மணி
- இந்தியா, இலங்கை - ஜனவரி 1, 00:00 மணி
- UAE, ஓமன், அஜர்பைஜான் - ஜனவரி 1, நள்ளிரவு 01:30 மணி
- கிரீஸ், தென்னாப்பிரிக்கா, சைப்ரஸ், எகிப்து, நமீபியா - ஜனவரி 1, அதிகாலை 03:30 மணி
- ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, மொராக்கோ, காங்கோ, மால்டா - ஜனவரி 1, அதிகாலை 04:30 மணி
- இங்கிலாந்து, அயர்லாந்து, போர்ச்சுகல் - ஜனவரி 1, அதிகாலை 05:30 மணி
- பிரேசில், அர்ஜென்டினா, சிலி - ஜனவரி 1, காலை 08:30 மணி
- போர்ட்டோ ரிக்கோ, பெர்முடா, வெனிசுலா, யுஎஸ் விர்ஜின் தீவுகள், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் - ஜனவரி 1, காலை 09:30 மணி
- யுஎஸ் ஈஸ்ட் கோஸ்ட் (நியூயார்க், வாஷிங்டன் டிசி ), பெரு, கியூபா, பஹாமாஸ் - ஜனவரி 1, காலை 10:30 மணி
- மெக்ஸிகோ, கனடாவின் சில பகுதிகள் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகள் - ஜனவரி 1, காலை 11:30 மணி
- யுஎஸ் வெஸ்ட் கோஸ்ட் ( லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ) - ஜனவரி 1, மதியம் 1:30 மணி
- ஹவாய், பிரெஞ்சு பாலினேசியா - ஜனவரி 1, மதியம் 4:30 மணி)
- பேக்கர் தீவு, ஹவ்லேண்ட் தீவு - ஜனவரி 1, 5:30 மணி
ஆகவே, இந்திய நேரப்படி இன்று பிற்பகலே உலகில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகிறது. இப்போது தொடங்கி நாளை மாலை வரை புத்தாண்டை ஒவ்வொரு நாடாக கொண்டாட தொடங்கும்.