மேலும் அறிய

Corona Virus: அதிவேகமாக பரவும் ஒமைக்ரான் க்ராக்கன் வைரஸ்...! பீதியில் மக்கள் - இதுக்கு இல்லயா சார் எண்டு..?

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கிருக்கும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன

கொரோனாவை விட அதன் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிக மாறுபாட்டைச் சந்தித்து வருகிறது எனலாம். ஒமைக்ரானின் XBB.1.5 வகைமையின் மற்றொரு ரகம் உலகம் முழுவதும் பரவிவருவது இந்தியா உட்படப் பல்வேறு நாடுகளை அதிர்ச்சி கொள்ளச் செய்திருக்கிறது. மேலும் இது தடுப்பூசி போடப்பட்டவர்களையும் பாதிக்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளது.

எக்ஸ்.பி.பி.1.5, இரண்டு வெவ்வேறு பி.ஏ.2 வகைகளில் இருந்து உருவானது. இதன் அதிகம் தொற்றும் 'ரீகாம்பினன்ட்' மாறுபாட்டைக் கொண்ட வகைமை தற்போது அமெரிக்காவில் பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இது கோவிட் நோயின் மிகவும் பரவக்கூடிய பதிப்பு. இதற்கு 'கிராக்கன் மாறுபாடு' என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பரவி இப்போது குறைந்தது 28 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. XBB.1.5 என்பது ஓமிக்ரான் XBB வகைமையின் வழித்தோன்றலாகும். இது இரண்டு முந்தைய வகைமைகளான  BA.2.75 மற்றும் BA.2.10.1 ஆகியவற்றில் இருந்து உருவானதாகும்.

Corona Virus: அதிவேகமாக பரவும் ஒமைக்ரான் க்ராக்கன் வைரஸ்...! பீதியில் மக்கள் - இதுக்கு இல்லயா சார் எண்டு..?

இதற்கிடயே,

சீனாவில் இருந்து வருபவர்கள் மீதான கொரோனா கட்டுப்பாடுகள் சரியான முடிவு தான் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கிருக்கும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது குறித்து சீனா அரசாங்கம் எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை வெளியிடாததால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வந்தது.

கட்டாய கொரோனா பரிசோதனை:

இந்நிலையில் சமீபத்தில், ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கட்டாய கொரோனா கட்டுப்பாடுகளை விதித்திருப்பது, சரியே என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து நேற்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஜெனீவாவில் காணொலிக் காட்சி வழியாக பேட்டி அளிக்கையில், “ சீனாவில் கொரோனா பாதிப்பானது மிக அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது. ஆனால், அது குறித்து முழுமையான மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை சீன அரசால் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், உலக நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை விதிப்பதால், அது தன் நாட்டு மக்களை காக்கும் என நம்பி கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்துகின்றன, இது சரியானது மட்டுமல்ல நியாயமானதும் தான்" என அவர் கூறியுள்ளார். 

சீனாவின் நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், சீனா கடந்த வாரம் ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்தது.

கட்டுப்பாடுகளுக்கு தளர்வு:

கோவிட் தொற்றுநோயை அடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தும் வகையில் சீனாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை ரத்து செய்ய சீனா முடிவு செய்தது. இதற்கிடையில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஃபைசரின் கோவிட் மருந்து பெய்ஜிங்கில் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா மெதுவாக கோவிட் உடன் வாழத் பழகி வருகிறது என்றே கூறவேண்டும். இதனால் கொரோனா தொடங்கியதிலிருந்து சீரான கோவிட் கட்டுப்பாடுகள் அமல் படுத்தி வந்த நிலையில் அதனை தற்போது சீன அரசாங்கம் தளர்த்தி வருகிறது. இதில் ஒரு பகுதியாக,  வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் இனி தனிமைப்படுத்த அவசியம் இல்லை என அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் அறிவித்தது.

புதைக்கக்கூடிய இடமில்லாத நிலை:

இந்த புதிய விதி ஜனவரி 8 முதல் அமலுக்கு வருகிறது. ஜனவரி 8ஆம் தேதி முன் வரை சீனாவில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் 5 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். சீனா தனது  கோவிட் கட்டுப்பாட்டு பாலிஸியை தளர்த்தியது உலக நாடுகளால் உற்று நோக்கப்பட்டது.  சீனாவில் கிராமப்புற நகரங்கள் தொற்றுநோய் பரவலை சமாளிக்க போராடும் போது கூட சமீபத்திய நடவடிக்கை வந்துள்ளது. கிராமப்புற பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. அதேபோல் சுடுகாடுகளில் இறந்தவர்களை புதைக்கக்கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  தினசரி கோவிட் எண்ணிக்கையை சீனா தெரிவிப்பதை நிறுத்திவிட்டது. மேலும் கட்டாய கொரோனா பரிசோதனை தளர்த்திய நிலையில் உண்மையான தினசரி பாதிப்பு என்ன என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: இன்று இரவு முதல் மழை ஆரம்பிக்கும்.. புயல் வலுவானதாக இருக்காது!
Fengal Cyclone LIVE: இன்று இரவு முதல் மழை ஆரம்பிக்கும்.. புயல் வலுவானதாக இருக்காது!
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Annapoorani Arasu Amma: ”அன்னப்பூரணி அரசு அம்மாவுக்கு 3வது மேரேஜ்” தெய்வீக திருக்கல்யாணம் என பக்தர்கள் பரவசம்..!
Annapoorani Arasu Amma: ”அன்னப்பூரணி அரசு அம்மாவுக்கு 3வது மேரேஜ்” தெய்வீக திருக்கல்யாணம் என பக்தர்கள் பரவசம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: இன்று இரவு முதல் மழை ஆரம்பிக்கும்.. புயல் வலுவானதாக இருக்காது!
Fengal Cyclone LIVE: இன்று இரவு முதல் மழை ஆரம்பிக்கும்.. புயல் வலுவானதாக இருக்காது!
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Annapoorani Arasu Amma: ”அன்னப்பூரணி அரசு அம்மாவுக்கு 3வது மேரேஜ்” தெய்வீக திருக்கல்யாணம் என பக்தர்கள் பரவசம்..!
Annapoorani Arasu Amma: ”அன்னப்பூரணி அரசு அம்மாவுக்கு 3வது மேரேஜ்” தெய்வீக திருக்கல்யாணம் என பக்தர்கள் பரவசம்..!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Mahindra BE 6e And XEV 9e: மஹிந்திராவின் BE 6e & XEV 9e கார் - அசத்தலான் ஸ்டைல், ரஹ்மான் டச் - டாப் 6 அம்சங்கள் இதோ..!
Mahindra BE 6e And XEV 9e: மஹிந்திராவின் BE 6e & XEV 9e கார் - அசத்தலான் ஸ்டைல், ரஹ்மான் டச் - டாப் 6 அம்சங்கள் இதோ..!
Group 4 Counselling: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்படி நடைபெறும்?- வெளியான முக்கியத் தகவல்!
Group 4 Counselling: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்படி நடைபெறும்?- வெளியான முக்கியத் தகவல்!
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Embed widget