Shocking Video: திடீரென நடுவானில் தீப்பிடித்த விமானம்.. 150 பயணிகளின் நிலை என்ன..? பதைபதைக்கும் வீடியோ...!
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Shocking Video : நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
விமானத்தில் தீ:
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து விமானம் ஒன்று துபாய்க்கு நேற்று இரவு 150 பயணிகளை ஏற்றிக் கொண்டு துபாய்க்கு புறப்பட்டது. இந்த விமானம் fly dubai flight 576 என்ற விமானம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அப்போது நேபாளத்தின் திரிபுவனம் விமான நிலையத்தில் இருந்து அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் என்ஜின் தீப்பிடித்தது. இதனை அடுத்து விமானம் தரையிறங்க முயன்றது. தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் விமானத்தின் கோளாறுகள் சரி செய்யபப்பட்டு அந்த விமானம் துபாய்க்கு புறப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது. விமானத்தில் 50 நேபாள பயணிகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது.
A Fly Dubai plane caught fire while taking off from Kathmandu Airport.
— NEXTA (@nexta_tv) April 24, 2023
The media write that the plane is trying to land. pic.twitter.com/nPbf8bEd6v
பாதிப்பு இல்லை:
இந்த விபத்தால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் விமானம் எந்த பிரச்சனையும் இல்லாமல் இயல்வு நிலைக்கு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பறவை மோதியதால் விமானம் தீப்பிடித்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தை நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியள்ளது.
Fly Dubai flight number 576, (Boeing 737-800) Kathmandu to Dubai flight is normal now and proceeding to her destination Dubai as per the flight plan.
— Civil Aviation Authority of Nepal (@hello_CAANepal) April 24, 2023
Kathmandu airport operation normal from 1614 UTC (09:59pm local time). pic.twitter.com/RYhNONAXRK
நடுவானில் என்ஜினில் தீப் பற்றி எரிந்த நிகழ்வை தரையில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க
Indonesia Earthquake: இந்தோனேஷியாவில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை