James Webb Telescope : இனிதான் இருக்கு சம்பவமே..! நாசாவின் அடுத்தக்கட்டம்.. விண்ணில் பாய்ந்த ஆல்ரவுண்டர் டெலஸ்கோப்!
இத்தொலைநோக்கி, பூமியிலிருந்து 1.5 மில்லியன் கி.மீ. தொலைவில் (L2 Lagrange Points), சூரியனைச் சுற்றி இயங்கும். (அபிள் தொலைநோக்கி, 560 கி.மீ. சுற்றுப்பாதையில் இயங்குகிறது)
14 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற பிரபஞ்சத்தின் பெருவெடுப்பு தொடர்புடைய ஆராய்ச்சிக்காக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இன்று ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது. அபிள்-ஐ விட பல மடங்கு ஆற்றல் மிக்க இந்த தொலைநோக்கியால், விண்வெளியில் இருக்கும் பல புதிர்களுக்கு விடைகிடைக்கும் என்று கூறப்படுகிறது.
LIVE NOW: With @NASAWebb now safely cruising on its own to #UnfoldTheUniverse, get a post-launch update from Europe's Spaceport in Kourou, French Guiana. https://t.co/hCxty5dSUR
— NASA (@NASA) December 25, 2021
The last view we'll ever see the physical body of #JamesWebbSpaceTelescope pic.twitter.com/8aMNclDaMt
— Surya (@SuryaCEG) December 25, 2021
சிறப்பம்சங்கள்:
முன்னதாக, இதன் சிறப்பம்சங்கள் குறித்து நாசா வெளிட்ட்ட செய்திக் குறிப்பில்,
- உலகெங்கும் வானியல் ஆர்வலர்களுக்கு, அபிள் விண்வெளித் தொலைநோக்கியின் சீரிய கண்டறிதல்களை மேலும் விளக்கவல்ல, சிறப்பான ஆய்வுக்கூடமாக இது விளங்கும்.
- இஃதொரு பன்னாட்டுக் கூட்டுமுயற்சியாகும் - நாசா (அமெரிக்கா), ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் & கனேடிய விண்வெளி நிறுவனம் ஆகிய இவற்றின் கூட்டுமுயற்சி.
- விண்வெளியில் வைக்கப்பட்டுள்ள தொலைநோக்கிகளுள், இது ஆகப் பெரியது! அபிள் நோக்கியை விட 100 மடங்கு ஆற்றல் மிக்கது!
- இது எத்துணைப் பெரிதென்றால், ஆரகாமி முறையில் மடிக்கப்பட்டு, ஏவுகலனில் அடக்கப்பட்டு, விண்வெளியில் விரிக்கப்படும் அளவுக்குப் பெரிதானது!
காகித ஓடங்களும் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியும்
— Sree Arravind (@sreearravind) December 24, 2021
காகிதக்கங்களை வைத்து உருவாக்கப்படும் ஒரு கலை "ஓரிகாமி". இது துணி மடிப்புகளை அடிப்படையாக கொண்டு உருவான கலையாக கருதப்படுகிறது. சீன காகித புரட்சிக்கு பிறகு காகித உற்பத்தியும் பயன்பாடும்.. (1) pic.twitter.com/mlMYvrjAgZ
- அடுக்குக் கதிர்க்காப்பு கொண்ட இது, கதிரவனின் அகச்சிவப்புக் கதிர்வீச்சிலிருந்தும், நிலவு மற்றும் பூமியின் கதிர்வீச்சிலிருந்தும் காக்க வல்லது. 1 மில்லியன் SPF (கதிர் பாதுகாப்புக் காரணி) உடையது.
- அண்டகோளப் பெருவெடிப்புக்குப் பின்பிறந்த மீன்மண்டலங்களை, 13.5 பில்லியன் ஆண்டுகட்குப் பின்சென்று காணவல்ல இது, முன்னெப்போதுமில்லா அகச்சிவப்பு உணர்மிகை உடையது.
#DidYouKnow?
— Tom Fulop-Lover of all things SPACE 🇦🇺 (@TomFulop) June 30, 2021
A Solar Orbit!
The James Webb Space Telescope will not be in orbit around the Earth, like the Hubble Space Telescope is, it will actually orbit the Sun, 1.5 million kilometers (1 million miles) away from the Earth at what is called the second Lagrange point or L2. pic.twitter.com/93cKmhZvko
- இத் தொலைநோக்கி, பூமியிலிருந்து 1.5 மில்லியன் கி.மீ. தொலைவில் (L2 Lagrange Points), கதிரவனைச் சுற்றி இயங்கும். (அபிள் தொலைநோக்கி, 560 கி.மீ. சுற்றுப்பாதையில் இயங்குகிறது)