மேலும் அறிய

NASA To explore Trojan Asteroids | ட்ரோஜன் சிறுகோள்களை ஆய்வு செய்ய திட்டம்.. நாசா அறிமுகப்படுத்தியிருக்கும் லூசி..

வியாழன் கிரகத்தில் ட்ரோஜன் விண்கற்கள் என்றழைக்கப்படும் பெரிய விண்கற்களை ஆய்வு செய்யும் பணிகளை அறிவித்துள்ளது நாசா நிறுவனம். இப்படியான திட்டம் அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை.

வியாழன் கிரகத்தில் ட்ரோஜன் விண்கற்கள் என்றழைக்கப்படும் பெரிய விண்கற்களை ஆய்வு செய்யும் பணிகளை அறிவித்துள்ளது நாசா நிறுவனம். இப்படியான திட்டம் அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த இரு விண்கற்களும் சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள கிரகங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருப்பவை என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

நாசா சார்பில், அமெரிக்காவின் ப்ளோரிடா பகுதியின் கேப் கேனவெரால் விமானப் படை நிலையத்தில் இருந்து `லூசி’ என்று பெயர் சூட்டப்பட்ட விண்கலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதனை `அட்லஸ் வி’ என்ற ராக்கெட் விண்ணுக்கு எடுத்துச் செல்கிறது. இந்த ராக்கெட்டை போயிங் நிறுவனமும், லாக்ஹீட் மார்டின் கார்ப் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. 

லூசியின் செயல்திட்டம் என்பது அடுத்த 12 ஆண்டுகளுக்குப் பல்வேறு எண்ணிக்கைகளிலான விண்கல்களை ஆய்வு செய்வதாகவும். வியாழன் கிரகத்தின் முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் இருந்து சூரியனை வலம் வரும் `ட்ரோஜன்’ என்றழைக்கப்படும் மிகப்பெரிய கற்களின் கூட்டம் குறித்து முதல் முறை ஆய்வு செய்யப் போவது லூசி விண்கலம் என்று நாசா குறிப்பிட்டுள்ளது. 

NASA To explore Trojan Asteroids | ட்ரோஜன் சிறுகோள்களை ஆய்வு செய்ய திட்டம்.. நாசா அறிமுகப்படுத்தியிருக்கும் லூசி..

சுமார் 225 கிலோமீட்டர் விட்ட அளவு கொண்டவை என நிர்ணயிக்கப்பட்டிருக்கும் ட்ரோஜான் விண்கற்களின் பெயர் கிரேக்கப் புராணங்களில் இருந்து சூட்டப்பட்டது. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கிரகங்கள் எப்படி தோன்றின, எப்படி இன்றைய நிலைக்கு உருவாகின என்று லூசியின் ஆய்வுகள் நமக்கு குறிப்புகளை அனுப்பும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த விண்கற்களில் கார்பன் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பூமியில் உயிர் தோன்றியது குறித்து புதிய பரிமாணங்கள் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

`நமது சூரியக் குடும்பத்தின் தொடக்க காலத்தின் எச்சங்கள் இந்த ட்ரோஜன் விண்கற்கள்’ என லூசி விண்கலத் திட்டத்தின் தலைமை ஆய்வாளர் ஹாரோல்ட் லெவிசன் தெரிவித்துள்ளார். விண்வெளி ஆய்வின் வரலாற்றில் லூசியைப் போல இத்தனை விண்கற்களை ஆய்வு செய்வதற்காக இதுவரை எந்தத் திட்டமும் அறிவிக்கப்பட்டதில்லை என நாசா தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

NASA To explore Trojan Asteroids | ட்ரோஜன் சிறுகோள்களை ஆய்வு செய்ய திட்டம்.. நாசா அறிமுகப்படுத்தியிருக்கும் லூசி..

நமது சூரியக் குடும்பத்தின் முக்கிய விண்கற்களின் இடமான டொனால்ட் ஜொஹான்சன் என்ற பகுதியையும் லூசி ஆய்வு செய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. வரலாற்றின் முதல் மனிதரின் படிமம் 1974ஆம் ஆண்டு எதியோபியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு `லூசி’ என்று பெயர் சூட்டப்பட்டது. அதே பெயர் இந்தத் திட்டத்திற்கும் சூட்டப்பட்டுள்ளது. 

லூசி விண்கலம் மற்றொரு வரலாற்றுச் சிறப்பான சாதனையையும் செய்யவுள்ளது. புவியீர்ப்பு விசைக்காக பூமியை மூன்று முறை வலம் வரவுள்ள லூசி விண்கலம் சூரியக் குடும்பத்தின் வெளி எல்லையில் இருந்து மீண்டும் பூமிக்குத் திரும்பவுள்ள முதல் விண்கலமாக இருக்கப் போகிறது எனவும் நாசா அறிவித்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ukraine Vs Russia: அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone Sri Lanka: இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ukraine Vs Russia: அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone Sri Lanka: இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
TN Roundup: டிட்வா புயல் அப்டேட், கடலோர மாவட்டங்களில் கனமழை, எடப்பாடி பயணம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: டிட்வா புயல் அப்டேட், கடலோர மாவட்டங்களில் கனமழை, எடப்பாடி பயணம் - தமிழகத்தில் இதுவரை
Ditwah Cyclone Update: Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditwah Cyclone Helpline: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
Embed widget