50 வயதில் அழகான பெண் குழந்தை; சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாடல் அழகி நவோமி கேம்பெல்!
அதில் பல நாள் சர்ச்சை ஆன தனது குழந்தை தத்தெடுக்க பட்டது என்னும் கூற்றுக்கு தெளிவான பதிலை கூறினார், "அவள் தத்தெடுக்கப் பட்டவள் அல்ல, அவள் என் குழந்தை" என்று கூறியிருந்தார்.
பிரபல வோக் இதழுக்கு நவோமி கொடுத்த சிறப்பு பேட்டிக்காக தனது 8 மாத குழந்தையுடன் வித விதமாக போஸ் கொடுத்து சர்ச்சைகளுக்கு பதில் சொல்லி இருந்தார். என் குழந்தை தத்தெடுக்கப்பட்டது அல்ல என்று ரசிகர்களின் பல நாள் கேள்விக்கு பதிலளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். பிரபல இங்கிலாந்து நடிகையும் சர்வதேச மாடல் அழகியுமான நவோமி கேம்பல் தனது 50வது வயதில் அழகான பெண் குழந்தைக்கு அம்மாவாகி இருந்தார். பல ஆண்டுகளாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வந்த அவர், கடந்த வருடம் மே மாதம் தனது குழந்தையின் பாதங்களை மட்டுமே காட்டியபடி எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உலகிற்கு அறிவித்தார்.
View this post on Instagram
குழந்தை பிறந்தது முதலே அந்த குழந்தை தத்தெடுக்கப் பட்ட குழந்தை, இந்த வயதில் எப்படி அவருக்கு குழந்தை பிறக்கும் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பலர் கேள்விகள் கேட்டு வந்தனர். இத்தனை நாட்கள் அவற்றை கண்டுகொள்ளாமல் இருந்து வந்த நவோமி முதன்முறையாக அதற்கு பதில் சொல்லி இருக்கிறார். வோக் இதழுக்கு அவர் கொடுத்துள்ள போஸில் அவரது குழந்தை கைகளுக்குள் அழகாக அமர்ந்திருக்க அட்டகாசமான க்ளிக்குகளால் பல காப்பிகள் விற்றுத்தீர்ந்தன. அதற்கு முக்கிய காரணம், இதுதான் அவர் முதன் முதலில் அந்த குழந்தையின் முகத்தை வெளி உலகிற்காக வெளியிடும் முதல் தருணம். அதனால் குதூகலம் அடைந்த ரசிகர்கள் வோக் இதழை சூழ்ந்தனர்.
View this post on Instagram
அதில் பல நாள் சர்ச்சை ஆன தனது குழந்தை தத்தெடுக்க பட்டது என்னும் கூற்றுக்கு தெளிவான பதிலை கூறினார், "அவள் தத்தெடுக்கப் பட்டவள் அல்ல, அவள் என் குழந்தை" என்று கூறியிருந்தார். குழந்தை குறித்து மேலும், "எனக்கு நடந்ததிலேயே சிறந்த விஷயம் அவள்தான், அவள்தான் என் வாழ்வின் ஆசிர்வாதம்" என்று குழந்தை குறித்து கூறியிருந்தார். குழந்தை எப்படி இருக்கிறார் என்ற கேள்விக்கு, "அவள் இப்போதே மிகவும் சுதந்திரமானவள், தனித்து நிற்பவள்… ஸ்மார்ட், 12 மணி நேரம் தூங்குகிறாள், அவள் நல்ல பெண்" என்று பதிலளித்தார்.