மேலும் அறிய

நிலவில் மர்ம குடிசை போன்ற வடிவம்..! சீன ரோவர் யுடு-2 அனுப்பிய புகைப்படங்கள்..

நிலவில் க்யூப் வடிவில் மர்மப் பொருள் ஒன்றை சீனாவின் ஆராய்ச்சி ரோவர் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

நிலவில் க்யூப் வடிவில் மர்மப் பொருள் ஒன்றை சீனாவின் ஆராய்ச்சி ரோவர் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சீனாவின் யுடு-2  (Yutu-2) ரோவர் நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ரோவர் அண்மையில் அனுப்பிய புகைப்படங்களில் நிலவின் வடபகுதியில் ஒரு கன சதுர வடிவ (கியூப் வடிவ) மர்ம பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சீன விண்வெளி திட்டங்கள் பற்றி செய்தி எழுதும் பத்திரிகையாளர் ஆண்ட்ரூ ஜோன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிரார்.

அவர் பதிவுள்ள முதல் ட்வீட்டில், யுடு-2 ஒரு கன சதுர வடிவ பொருளை புகைப்படம் எழுத்துள்ளது. இது நிலவில் வட பகுதியில் வோன் கர்மான் க்ரேட்டரில் இருந்து 80 மீட்டர் தொலைவில் கிடக்கிறது எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த ட்வீட் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்களை பரபரப்பக்க வைத்தது. இதனையடுத்து ஆண்ட்ரூ ஜோன்ஸ் அடுத்தடுத்த ட்வீட்களைப் பதிவு செய்தார்.

அதில் அவர், கொஞ்சம் மங்கலாகத் தெரியும் அந்தப் பொருள் ஏதோ கல் தூணோ அல்லது வேற்றுகிரகவாசியோ இல்லை. ஆனாலும் அது என்னவென்று நிச்சயமாக ஆராய வேண்டும். இப்போது கிடைத்துள்ள புகைப்படத்தைக் கொண்டு அது என்னவென்பதை தெளிவாக அறிய முடியவில்லை. 8 ஆண்டுகளுக்கு முன்னதாக, டிசம்பர் 1 ஆம் தேதி சேங் இ- 3 மிஷன் விண்களம் எடுத்த புகைப்படத்தில் மிகப்பெரிய கற்பாறைகள் கண்டறியப்பட்டன என்று பதிவிட்டுள்ளார்.


நிலவில் மர்ம குடிசை போன்ற வடிவம்..! சீன ரோவர் யுடு-2 அனுப்பிய புகைப்படங்கள்..

இப்போது யுடு-2  Yutu-2 ரோவர் அந்தப் பொருளில் இருந்து 80 மீட்டர் தொலைவில் உள்ளது. அது இன்னும் நெருங்கிச் செல்லும்போது மர்மப் பொருள் என்னவென்று தென்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுடு-2  வின் சுவாரஸ்ய கண்டுபிடிப்பு:

யுடு-2  வின் சுவாரஸ்ய கண்டுபிடிப்பு இது முதன்முறையல்ல. ஏற்கெனவே கடந்த 2019 ஆம் ஆண்டு யுடு-2 ரோவர் ஜெல் போன்ற ஒரு பொருலைக் கண்டறிந்தது. ஆராய்ச்சியில் அதுவும் ஒருவகை பாறை என்பது உறுதியானது. யுடு-2 2019ல் சேங்-இ 4 லேண்டர் மூலம் நிலவில் தரையிறங்கியது. அன்றிலிருந்து இதுவரை இந்த ரோவர் 37 நிலவு தினப் பணிகளை முடித்துள்ளது. 

நிலவு நாள் என்றால் என்ன?

புவி தனது அச்சில் சுழல்வதோடு தோராயமாக 365 முறை கதிரவனையும் சுற்றி வருகின்றது. அதேபோல் நிலவு தனது அச்சில் சுழல்கிறது. நிலவு பூமியை ஒருமுறை முழுவதுமாக சுற்றிவிட்டு மீண்டும் அதன் இடத்திற்கே செல்ல 27 நாட்கள் 7 மணி நேரம் 43 நிமிடங்கள் 12 நொடிகள் ஆகின்றன. இதனைத் தான் நிலவு தினம் (Lunar Day) என்று குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் யுடு-2  ரோவர் 37 நிலவு தினங்களை முடித்துள்ளது.   

இப்போது யுடு-2  ரோவர் எடுத்துள்ள புகைப்படத்தில் தெரியும் மர்மப் பொருள் என்னவென்பது இன்னும் சில நாட்களில் நிச்சயம் என்னவென்று தெரிய வரும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
Embed widget