Wild Poliovirus: மொசாம்பிக்கில் மீண்டும் போலியோ!! 30 வருடங்களுக்கு பின் திரும்ப வந்த வைரஸ்! உஷாராகும் உலகநாடுகள்!
கிழக்கு ஆப்ரிக்க கண்டத்தைச் சேர்ந்த மொசாம்பிக் நாட்டில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு போலியோ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை இந்திய நாட்டில் அறவே ஒழிக்கும் வகையில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் கடந்த 27 ஆண்டுகளாக தீவிர முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. உலக நாடுகள் பலவற்றில் போலியோ வைரஸ் பாதிப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், கிழக்கு ஆப்ரிக்க கண்டத்தைச் சேர்ந்த மொசாம்பிக் நாட்டில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு போலியோ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 'Wild polio virus' வகையைச் சேர்ந்த பாதிப்பு ஒரு குழந்தைக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், உலக நாடுகள் உஷாராக தொடங்கி உள்ளன. மேலும் பல நாடுகளுக்கு இந்த பாதிப்பு பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் மட்டுமே போலியோ வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. இப்போது, மொசாம்பிக் நாட்டில் மீண்டும் போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
போலியோ பாதிப்பு என்றால் என்ன?
போலியோ வைரஸ் பாதிப்பு பொதுவாக திறந்தவெளி மலத்தில் குடி கொண்டிருக்கும் வைரஸ் வழியே ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு பரவுகிறது. போலியோ பாதிக்கப்பட்டவரின் மலத்தில் வாழும் இந்த வைரஸ்கள், சரியாக கைகழுவாமல் இருக்கும்போது பரவுகிறது. காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி போன்ற அறிகுறிகள் இந்நோய் பாதிப்பின்போது தெரியவரும்.
#Polio vaccination round 2 is launching this week in #Tanzania 🇹🇿 💪🏾
— WHO African Region (@WHOAFRO) May 21, 2022
The 4-part campaign aims to vaccinate all children under 5 years old in #Mozambique, #Malawi, Tanzania & #Zambia. The oral #polio vaccine is safe & effective.✅#ProtectAgainstPolio pic.twitter.com/6YfboQBMgK
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்