USA School Shooting: பள்ளியில் பயங்கர துப்பாக்கிச் சூடு - 2 மாணவர்கள் பலி, 17 பேர் காயம் - பெற்றோர் அதிர்ச்சி
USA School Shooting: அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

USA School Shooting: அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 மாணவர்கள் காயமடைந்தனர்.
பள்ளியில் பயங்கர துப்பாக்கிச் சூடு:
அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் உள்ள ஒரு கதோலிக்கப் பள்ளியில், காலை பிரார்த்தனையின் போது ஒருவர் கணமூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் 2 மாணவர்கள் உயிர்ழந்த நிலையில், 17 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரைஃபிள், ஷாட்கன் மற்றும் பிஸ்டல் ஆகியவற்றைக் கொண்டு, ஜன்னல் வழியாக பலமுறை மாணவர்களை நோக்கி அந்த நபர் சுட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவில், தாக்குதல் நடத்திய நபர் தற்கொலை செய்துகொண்டதாகவும் காவல்துறை தரப்பில் நம்பப்படுகிறது.
காயமடைந்தோருக்கு தீவிர சிகிச்சை:
துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்தவர்கள் நகரில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஹென்னெபின் ஹெல்த்கேர் 11 பாதிக்கப்பட்டவர்களை மீட்டதாக தெரிவித்துள்ளது. 6 முதல் 14 வயதுக்குட்பட்ட ஒன்பது குழந்தைகள், இரண்டு பெரியவர்கள் உட்பட. நான்கு பேர் அறுவை சிகிச்சைக்கு விரைந்தனர். மேலும் ஐந்து குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்னபோலிஸ் நகர மையத்திலிருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைதியான குடியிருப்பு-வணிகப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
50-க்கும் அதிகமான தோட்டாக்கள்:
தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 8 மற்றும் 10 என கூறப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக பேசிய அக்கம்பக்கத்தினர். ஒரு சில நிமிடங்களிலேயே 50-க்கும் அதிகமான தோட்டாக்கள் சுடப்பட்ட சத்தம் கேட்டதாக கூறியுள்ளனர். இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரார்த்தனை நடந்த தேவாலயத்தில் இருந்த மாணாக்கர்களை பத்திரமாக மீட்டனர். பாதுகாப்பான் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, அங்கு காத்திருந்த தங்களது பெறோரை பார்த்து மாணவர்கள் கதறி அழுதனர்.
ட்ரம்ப் கண்டனம்:
அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “மினசோட்டாவின் மின்னபோலிஸில் நடந்த துயரமான துப்பாக்கிச் சூடு குறித்து எனக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. FBI விரைவாக பதிலளித்தது, அவர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். இந்த பயங்கரமான சூழ்நிலையை வெள்ளை மாளிகை தொடர்ந்து கண்காணிக்கும். சம்பந்தப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வதில் என்னுடன் சேருங்கள்!” என வேதனை தெரிவித்துள்ளார்.
மின்னபோலிஸ் நகரில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. தேவாலய துப்பாக்கிச் சூட்டுக்கு 24 மணி நேரத்திற்குள், மின்னபோலிஸ் முழுவதும் நடந்த மூன்று தனித்தனி சம்பவங்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















