மேலும் அறிய

Meta Layoff: மெட்டாவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து இந்தியர்கள் நீக்கம்.. 6000 பேர் பணிநீக்கம்.. அதிர்ச்சி

மெட்ட குழுமம் தங்களது நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருந்த இந்தியர்கள் உட்பட 6000 பேரை, பணிநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மெட்ட குழுமம் தங்களது நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருந்த இந்தியர்கள் உட்பட 6000 பேரை, பணிநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

6000 பேர் பணிநீக்கம்:

மெட்ட குழுமத்தில் பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக, கடந்த மார்ச் மாதம் அந்த நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து 4 ஆயிரம் பேரின் வேலை பறிக்கப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக தற்போது மேலும், 6000 பேர் மெட்டா நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்தியர்களும் அடங்கியுள்ளனர்.

முக்கிய பொறுப்புகளை இழந்த இந்தியர்கள்:

மெட்டா இந்தியாவின் சந்தைப்படுத்தல் இயக்குநர் அவினாஷ் பந்த் மற்றும் மீடியா பார்ட்னர்ஷிப்களின் இயக்குநர் மற்றும் தலைவரான சாகேத் ஜா சௌரப் ஆகியோரும் இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பிராண்ட் மேனேஜ்மென்ட், மீடியா மேனேஜ்மென்ட், விளம்பர மேம்பாடு மற்றும் மூலோபாய சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற பந்த், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மெட்டா நிறுவனத்தில் சேர்ந்தார். அதேபோன்று இந்தியாவில் உள்ள ஸ்டுடியோக்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், வெளியீட்டாளர்கள், படைப்பாளிகள் மற்றும் ஏஜென்சிகளுடன் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் உறவை நிர்வகித்தவர் சௌரப். கடந்த 2018-ம் ஆண்டு முதல்  மெட்டா நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

எந்தெந்த துறைகளில் பணிநீக்கம்:

வணிகம், விளம்பர விற்பனை, சந்தைப்படுத்தல், தகவல் தொடர்பு மற்றும் கூட்டாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த புதிய பணிநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் வந்த மெயில்:

”பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியான முதலே எங்களுக்கு தூக்கம் இல்லை. எப்போது, யார் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற பதற்றத்திலேயே கடந்த 2 மாதங்களாக சரியான தூக்கமின்றி தவித்தோம். இந்நிலையில், அதிகாலை 4.30 மணியளவில் என்னை பணியில் இருந்து நீக்கிவிட்டதாக, நிறுவனத்தில் இருந்து எனக்கு மெயில் வந்தது” என பாதிக்கப்பட்ட ஒருவர் தனது லிங்க்ட் இன் பக்கத்தில் எழுதியிருந்தார். பலரும் தங்களது வேதனையை பகிர்ந்து வருகின்றனர்

21 ஆயிரம் பேர் பணிநீக்கம்:

மெட்டா நிறுவனம் இதுவரை 21 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது. முன்னதாக கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கி, முதற்கட்டமாக 11 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதைதொடர்ந்து தற்போது இரண்டாவது கட்டமாக 10000 தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்களது பணிகளை இழந்துள்ளனர். 

காரணம் என்ன?

உலக அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக ஒரு பரந்த மறுசீரமைப்பு முயற்சியை மெட்டா மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மெட்டா அதன் நிறுவன கட்டமைப்பை சமன் செய்யவும், செயல்பாடுகளை குறைக்கவும், உள் செயல்பாடுகளை மறுசீரமைக்கவும் மற்றும் ஆட்சேர்ப்பு விகிதங்களைக் குறைக்கவும் முடிவெடுத்துள்ளது. இதே காரணங்களால் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget