86ஆவது திருமணம் செய்யும் நபர்... இம்முறை முன்னாள் மனைவியையே மீண்டும் கரம் பிடிக்கிறார்! காரணம் என்ன?
உள்ளூரில் 'பிளேபாய் கிங்' என்று செல்லமாக அழைக்கப்படும் இந்நபர், விவசாயம் செய்து வருகிறார். தனது 14 வயதில் முதன்முதலாக தன்னை விட இரண்டு வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் கான்.
இந்தோனேசியா, மேற்கு ஜாவாவைச் சேர்ந்த 61 வயது நபர், 88ஆவது திருமணம் செய்து கொள்ள உள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியா, மேற்கு ஜாவா, மஜலெங்காவைச் சேர்ந்த கான் எனும் இந்நபர், 86ஆவது முறையாக தனது முன்னாள் மனைவியை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகமான ட்ரிபுன்நியூஸில் தகவல் வெளியாகி உள்ளது.
உள்ளூரில் 'பிளேபாய் கிங்' என்று செல்லமாக அழைக்கப்படும் இந்நபர், விவசாயம் செய்து வருகிறார். தனது 14 வயதில் முதன்முதலாக தன்னை விட இரண்டு வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் கான்.
இந்நிலையில், தன் முன்னாள் மனைவி மீண்டும் தன்னை விரும்புவதாக வந்து தெரிவித்ததை அடுத்து தன்னால் அவருக்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை என கான் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் பிரிந்து நீண்ட நாட்களாகிவிட்டாலும், எங்களுக்கு இடையேயான காதல் இன்னும் வலுவாக உள்ளது. அந்த நேரத்தில் எங்களின் திருமணம் ஒரு மாதம் மட்டுமே நீடித்தது.
தற்போது திருமணம் செய்யவிருக்கும் என் முன்னாள் மனைவி இன்னும் என்னைக் காதலிக்கிறார். அப்போது எனது மோசமான அணுகுமுறை காரணமாக, திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மனைவி என்னிடம் விவாகரத்து கோரினார்” என கான் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கோபமடைந்த கான் பல பெண்கள் தன்னைக் காதலிக்க ஆன்மீகத்தை நாடியதாகத் தெரிவித்துள்ளார்.
“பெண்களுக்கு நன்மை விளைவிக்காத செயல்களை செய்வதை நான் விரும்பவில்லை. அவர்களின் உணர்ச்சிகளுடன் விளையாடவும் எனக்கு விருப்பமில்லை. ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுவதை விட திருமணம் செய்துகொள்வதே சிறந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
87 திருமணங்கள் செய்து கொண்டுள்ள கானுக்கு எத்தனை குழந்தைகள் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
மற்றொரு சம்பவம்
முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் ஏழு பிள்ளைகளுடன் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ள இருந்த தந்தையின் முயற்சியை அவரது பிள்ளைகள் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்திய சம்பவம் பேசுபொருளானது.
உத்தரப்பிரதேசம், சீதாபூரைச் சேர்ந்த 55 வயதான ஷாபி அகமது எனும் இந்நபர் முன்னதாக ஐந்தாவது திருமணம் செய்து கொள்ளவிருந்த நிலையில், அவரது ஏழு குழந்தைகளும் அவர்களின் தாய்மார்களும் திருமண மண்டபத்துக்குள் அதிரடியாக நுழைந்து திருமணத்தை தடுத்துள்ளனர்.
திருமண மண்டபத்தில் அந்தக் குழந்தைகள் தாங்கள் யார் என்பதும் குறித்தும், தங்களது தாய்மார்கள் குறித்த அடையாளத்தை மணப்பெண்ணின் குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது, அங்கு மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
இதையடுத்து அங்கு கூடியிருந்த ஏராளமான மக்கள், திருமணத்துக்குகு தயாராக இருந்த மணமகனை சரமாரியாகத் தாக்கியதால், மணமகன் அந்த இடத்தை விட்டு ஓட முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து கோட்வாலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தேஜ் பிரகாஷ் சிங் கூறுகையில், "இந்தச் சம்பவம் குறித்து மணமகனின் குழந்தைகள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு, நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று குற்றவாளியை கைது செய்தோம்" என்றார்.
இந்நபர் தன் முதல் மற்றும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டவர்களை விவாகரத்து செய்ததும், மூன்றாவது மற்றும் நான்காவது திருமணம் மனைவிகளிடம் ஒரு சில காரணங்களை கூறி புத்திசாலித்தனமாக பிரிந்ததும் குறிப்பிடத்தக்கது.