Watch Video: முதலைக்கு ஊட்டிய உணவு.. இவ்ளோ செல்லமா? ஸ்டீவ் இர்வினை நினைவூட்டும் வைரல் வீடியோ!
வழக்கமான செல்லப் பிராணிகள், அவற்றின் ஓனர்களில் இருந்து மாறுபட்டு, முதலை ஒன்றை செல்லப் பிராணிபோல் தடவிக்கொடுத்து உணவூட்டும் நபரின் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
இணையத்தில் மனிதர்கள் தாண்டி விலங்குகள் அதுவும் செல்லப் பிராணிகள் என்றுமே கவர்ந்திழுத்து லைக்ஸ் அள்ளத் தவறுவதே இல்லை.
நாய், பூனைகள் தொடங்கி ஆமைகள், ஆந்தைகள் வரை பல வித்தியாசமான செல்லப் பிராணிகளும் இணையத்திலும், இன்ஸ்டாவிலும் தங்கள் ஓனர்கள் மற்றும் தங்கள் சொந்த பேஜ்கள் மூலம் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
இந்நிலையில், இந்த வழக்கமான செல்லப்பிராணிகள், அவற்றின் ஓனர்களில் இருந்து மாறுபட்டு, முதலை ஒன்றை செல்லப்பிராணிபோல் தடவிக் கொடுத்து செல்லம் கொஞ்சும் நபரின் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
தண்ணீரில் இருந்து வெளிவரும் முதலைக்கு உணவளிக்கும் ஒரு நபர் தனது கால்களால் அதனைச்சுற்றி வளைத்து பாசமாக தடவிக்கொடுக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
What type of pet is that bro?pic.twitter.com/SjlJRYJsDA
— Figen (@TheFigen) August 2, 2022
15 வினாடிகள் நீளமுள்ள இந்த வீடியோ, முதலையை சில முறை சீண்டி, இறுதியாக அம்மனிதர் உணவு கொடுக்கிறார். ஒரு பக்கம் இவர்களது பாசப் பிணைப்பு காண்போரை மகிழ்ச்சியிலும், மற்றொரு புறம் அச்சத்திலும் ஆழ்த்தி வருகிறது.
View this post on Instagram
மேலும் 90-களில் ’முதலை மனிதர்’எனக் கொண்டாடப்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் இர்வினை நினைவூட்டும் விதமாகவும் இந்த வீடியோ அமைந்துள்ளது.
பல முதலைகளை அசால்ட்டாக டீல் செய்து அவற்றைக் கொஞ்சி மகிழ்ந்து க்ரொக்கடைல் ஹண்டர் எனும் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த ஸ்டீவ் இர்வின், 2006ஆம் ஆண்டு ஸ்டிங் ரே எனும் மீன் தாக்கி எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram