Gandhi Statue at UN: ஐநாவில் காந்தியின் சிலை.. திறந்து வைத்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.. சுவாரஸ்ய தகவல்..
நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
#WATCH | EAM Dr S Jaishankar and UN Secretary-General António Guterres unveil the bust of Mahatma Gandhi at the United Nations Headquarters in New York pic.twitter.com/CmgwB9lf43
— ANI (@ANI) December 14, 2022
ஐக்கிய நாடுகள் சபையின் வடக்கு பகுதியில் நடைபெற்ற விழாவில், பொதுச் சபையின் 77வது அமர்வின் தலைவர் சபா கொரோசியும் (csaba korosi) கலந்து கொண்டார். ஐநா தலைமையகத்தில் நிறுவப்பட்ட முதல் காந்தி சிலை இதுவே. இது புகழ்பெற்ற இந்திய சிற்பியும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ராம் சுதாரால் செய்யப்பட்டது, இவர் குஜராத்தில் 'ஒற்றுமை சிலை'யை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
This bust of #MahatmaGandhi now adorns the prestigious North Lawn Gardens of the United Nations headquarters at New York.
— Ruchira Kamboj (@ruchirakamboj) December 14, 2022
The bust was unveiled by @DrSJaishankar @antonioguterres and @UN_PGA today. pic.twitter.com/Miykt3Z86y
உலகெங்கிலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான செயல்களுக்கு காந்தியின் கொள்கைகள் தொடர்ந்து வழிகாட்ட வேண்டும் என்று ஜெய்சங்கர் சிலை திறப்பு நிகழ்ச்சியின் போது கூறினார்.
"இன்று, உலகம் வன்முறை, ஆயுத மோதல்கள் மற்றும் அவசரநிலைகளால் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் காந்தி இலட்சியங்கள் தொடர்ந்து வழிகாட்ட வேண்டும்" என்று அமைச்சர் கூறினார்.
ஐநா தலைமையகம் உலகெங்கிலும் உள்ள பரிசுகள் மற்றும் கலைப்பொருட்களை பெருமையுடன் காட்சிப்படுத்துகிறது. ஐ.நா. தலைமையகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மற்றுமொரு சிற்பம், ஜூலை 26, 1982 அன்று நன்கொடையாக அளிக்கப்பட்ட சூரியக் கடவுளான 'சூர்யா'வின் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கருங்கல் சிலை ஆகும்.
சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பின் (UNSC) விவாதத்திற்கு ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். டிசம்பர் மாதத்திற்கான சக்திவாய்ந்த 15 நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது பேசிய அவர், சீனா மற்றும் அதன் நண்பன் பாகிஸ்தான் மீது ஒரு மறைக்கப்பட்ட தாக்குதலில், ஜெய்சங்கர் பயங்கரவாதத்தின் குற்றவாளிகளை நியாயப்படுத்தவும் பாதுகாக்கவும் பலதரப்பு தளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.
ஐநாவுக்கான இந்தியாவின் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, "கடந்த 1982-ம் ஆண்டு சூரிய கடவுளின் சிலை ஒன்றை இந்தியா ஐநாவுக்கு பரிசாக தந்திருந்தது.. அது பாலப் பேரரசு கால 11ம் நூற்றாண்டு கருங்கல் சிலையாகும்.. அதனை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பரிசாக அளித்தார். அந்த சிலை ஐ.நா. மாநாட்டு கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைதான் ஐ.நாவுக்கு இந்தியா அளித்த முதல் பரிசாகும். மகாத்மா காந்தி சிலையானது, இந்தியாவின் 2வது பரிசாகும். இந்த சிலை இருக்கும் ஐ.நா. தலைமையகப் புல்வெளி பகுதியில்தான், 1961 முதல் 1989ம் அண்டு வரை ஜெரம்னியை பிரித்த பெர்லின் சுவரின் பகுதிகள், தென் ஆப்பிரிக்கா பரிசாக அளித்த நெல்சன் மண்டேலா சிலைகள் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன" என்றார்.