ஒரு நியாயம் வேணாமா? முன்னாள் காதலனிடம் பணம் பறிக்க தன்னைத்தானே கடத்தி பெண் போட்ட ட்ராமா..
பெண் ஒருவர் தன்னை தானே கடத்தி கொண்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் ஒரு நபரை கடத்தி பண பறிக்கும் குற்றம் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் தற்போது பெண் ஒருவர் தன்னை தானே கடத்திவிட்டதாக நாடகமாடும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் பகுதியைச் சேர்ந்தவர் லியா ஜுமேக்ஸ்(20). இவர் ஒருவரை காலித்து வந்ததாக கூறப்படுகிறது.
அவரிடம் இருந்து பணம் பெற ஜூமேக்ஸ் திட்டமிட்டுள்ளார். இதற்காக தன்னை தானே கடத்தி கொண்டு ஒரு நாடகமாட முடிவு எடுத்துள்ளார். அதன்படி தன்னை ஒரு நாற்காலியில் கட்டிவிட்டு துப்பாக்கி முனையில் ஒரு மிரட்டுவது போல் ஒரு படத்தை தன்னுடைய அனுப்பியுள்ளார். அதைவைத்து சுமார் 2000 பவுண்ட் கொடுத்தால் மட்டுமே உன்னுடைய காதலியை விடுவிக்க முடியும் என்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவருடைய காதலர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளர். அவர் அளித்த நம்பரை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதில் ஜூமேக்ஸ் தான் அந்த நம்பரையும் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. அதன்பின்னர் ஜூமேக்ஸ் வீட்டிற்கு சென்று காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணையில் அவர் கடத்தல் நாடகமாடியதை ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது தன்னுடைய குடும்பத்திற்கு கிறிஸ்துமஸ் பரிசு வாங்க இந்த நாடகத்தை அரங்கேற்றியதாக ஒப்புக் கொண்டுள்ளார். இவர் மீது ஏமாற்றியது மற்றும் பணம் மோசடி செய்ய முயன்ற புகார்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஜூமேக்ஸ் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் அவருக்கு 34 வாரங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். அத்துடன் அந்தப் பெண்ணிற்கு 15 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளனர்.
மேலும் இந்தப் பெண் தன்னுடைய குற்றத்தை உணர்வதற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பெண் ஒருவர் தன்னுடைய சொந்த தேவைக்காக தன்னைத்தானே கடத்தி கொண்டு காதலரிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் வரை கேட்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று போலி கடத்தல் நாடகமாடுபவர்களுக்கு இந்த பெண்ணின் தண்டனை ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: வழுக்கை தலையோடு இங்கிலாந்து ராணி.. கிளம்பிய சர்ச்சை.. என்ன விளக்கம் சொன்னாங்க தெரியுமா?