மேலும் அறிய

Epstein Files Bill Gates: பில் கேட்ஸ்-க்கு ‘அந்த‘ நோயா.? ரஷ்ய பெண்களுடன் தொடர்பு.? பகீர் கிளப்பிய லேட்டஸ்ட் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்

அமெரிக்காவில், சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்த சர்ச்சைக்குரிய தகவல் இடம்பெற்றுள்ளது. ஆனால், அவரது தரப்பு இதனை மறுத்துள்ளது. விவரங்களை பார்ப்போம்.

அமெரிக்க நீதித்துறை நேற்று வெளியிட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்த சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்கள் இடம் பெற்றுள்ளன. அதில், பில் கேட்ஸ் ரஷ்யப் பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் மூலம் அவருக்கு பால்வினை நோய் (STD) ஏற்பட்டதாகவும், எப்ஸ்டீன் மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவல்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

எப்ஸ்டீனின் மின்னஞ்சல் கூறுவது என்ன.?

நேற்று வெளியான கோப்புகளில், 2013-ம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனக்குத் தானே அனுப்பிக்கொண்ட ஒரு இமெயிலில், பில் கேட்ஸ் குறித்த திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ரஷ்ய பெண்களுடன் தொடர்பு கொண்டதால் ஏற்பட்ட பால்வினை நோய்க்காக(STD) சிகிச்சை அளிக்க மருந்துகளை பெற எப்ஸ்டீன் உதவியதாகக் தெரிகிறது.

மேலும், அந்த மருந்துகளை தனது மனைவி மெலிண்டாவிற்கு தெரியாமல் அவருக்கு வழங்குவதற்கும் பில் கேட்ஸ் முயன்றதாகவும் எப்ஸ்டீன் அந்த மின்னஞ்சலில் எழுதியுள்ளார். மேலும், தங்களது 6 வருட நட்பை முடித்துக்கொள்வதற்காக பில் கேட்ஸை அவர் விமர்சித்துள்ளார்.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் 1994-ம் ஆண்டு திருமணம் செய்து 2021 வரை வாழ்ந்த பின் பிரிந்தனர். கேட்ஸின் விவகாரங்களும், எப்ஸ்டீன் உடனான அவரது தொடர்பும் தான், தங்கள் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்று என மெலிண்டா கேட்ஸ் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

பில் கேட்ஸ் தரப்பு மறுப்பு

இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் பதிலடி கொடுத்துள்ளார். எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் அபத்தமானவை என்றும், முற்றிலும் பொய்யானவை என்று அவர் கூறியுள்ளார். மேலும், ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு பில் கேட்ஸுடன் இருந்த தொடர்பை அவர் துண்டித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், எப்ஸ்டீன் இத்தகைய அவதூறுகளை பரப்ப முயன்றதாகவும் பில் கேட்ஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

2019-ம் ஆண்டு நியூயார்க் சிறையில் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக காத்திருந்தபோது தற்கொலை செய்து கொண்ட எப்ஸ்டீனுடனான தனது தொடர்புக்கு வருந்துவதாக, பில் கேட்ஸ் ஏற்கனவே கூறியுள்ளார். மேலும், அவர் நீண்ட காலமாக எந்தவொரு முறையற்ற நடத்தையையும் மறுத்து வருவதோடு, எப்ஸ்டீனுடன் தனக்கு எந்த வணிக உறவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்க நீதித்துறை கூறுவது என்ன.?

இந்த ஆவணங்களை வெளியிட்ட அமெரிக்க நீதித்துறை, இதில் உள்ள அனைத்து தகவல்களும் உண்மை என்று தாங்கள் உறுதிப்படுத்தவில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளது. மறுபுறம், எப்ஸ்டீன் தனது டைரி குறிப்புகள் மற்றும் மின்னஞ்சல்களில் பல மிகைப்படுத்தப்பட்ட அல்லது பொய்யான தகவல்களை எழுதியிருக்க வாய்ப்புள்ளதாக புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன.

 

 

தலைப்பு செய்திகள்

Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget