ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Quantum Energy Plasma இ ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் குறித்து கீழே காணலாம்.

இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இ ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் வளர்ந்து வரும் நிறுவனமாக திகழ்வது Quantum Energy.
Quantum Energy Plasma:
இந்த நிறுவனத்தின் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர் பற்றி கீழே விரிவாக காணலாம்.
இந்த ஸ்கூட்டரில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது.
1. Plasma XR - ரூபாய் 91 ஆயிரத்து 529
2. Plasma X - ரூபாய் 1 லட்சத்து 1 ஆயிரத்து 739
மைலேஜ்:
இதில் 2.1 கிலோவாட் பேட்டரி மற்றும் 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முதல் வேரியண்ட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இரண்டாவது வேரியண்ட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. முதல் வேரியண்டில் அதிகபட்சமாக 60 கி.மீட்டர் வேகத்தில் செல்லலாம். 2வது வேரியண்டில் அதிகபட்சமாக 65 கி.மீட்டர் வேகத்தில் செல்லலாம்.
பேட்டரி வசதிகள்:
இந்த இ ஸ்கூட்டரில் சாம்பல், வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களில் உள்ளது. எகோ மற்றும் ஸ்போர்ட் ரைட் மோட்கள் உள்ளது. பிஎல்டிசி ஹப் மோட்டார் வசதி உள்ளது. 2.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 1 போர்ட்டபிள் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐபி 67 பேட்டரி ஐபி ரேட்டிங் ஆகும். போர்ட்டபிள் சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் ட்ரம் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.
சிறப்புகள்:
ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் 10 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 10 இன்ச் சக்கரங்களும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 98 கிலோ எடை கொண்டது.
178 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி கொண்டது. 3 வருடம் மோட்டார் வாரண்டி ஆகிறது. 5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. மொபைல் போன் கனெக்ஷன் ப்ளூடூத் பொருத்தப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. 1 ட்ரிப்மீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது.
வசதிகள்:
லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ், பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி உள்ளது.
எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலில் எரியும் மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. டிக்கி வசதி உள்ளது. பில்லியன் சீட் வசதி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















