மேலும் அறிய

Elon Musk : ஏலியன்கள், ட்விட்டரில் ஆட்குறைப்பு, சமையல் கட்டு, வீக்கான இண்டெர் கனெக்‌ஷன்.. கன்டென்ட்டாக களைகட்டும் எலான் மஸ்க்..

சட்டத்தை மீறாத வகையில், மக்கள் எதை பேச விரும்புகிறார்களோ அதை பேச அனுமதிக்க வேண்டும் என ட்விட்டர் ஊழியர்களிடம் எலான் மஸ்க் பேசியுள்ளார்.

உலகின் முதன்மை பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட்விட்டர் ஊழியர்களுடன் நேற்று உரையாடினார். ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்க எலான் மஸ்க் முன் வந்த நிலையில், முதல்முறையாக அவர் ட்விட்டர் ஊழியர்களுடன் பேசியுள்ளார்.

Elon Musk : ஏலியன்கள், ட்விட்டரில் ஆட்குறைப்பு, சமையல் கட்டு, வீக்கான இண்டெர் கனெக்‌ஷன்.. கன்டென்ட்டாக களைகட்டும் எலான் மஸ்க்..

எந்த வித கட்டுப்பாடும் இன்றி, ஊழியர்களுடன் சுமார் 10 நிமிடங்களுக்கு எலான் மஸ்க் உரையாடினார். ஊழியர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதில் அளித்தார். 

பேச்சுரிமை முதல் வேற்றுகிரகவாசிகள் வரை அவர் ஊழியர்களுடன் விவாதித்த ஐந்து விவகாரங்கள் குறித்து கீழே காண்போம்.

பேச்சுரிமை

சுதந்திரமான பேச்சுரிமைக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் எலான் மஸ்க், "சட்டத்தை மீறாத வகையில், மக்கள் எதை பேச விரும்புகிறார்களோ ட்விட்டரில் அதை பேச அனுமதிக்க வேண்டும்" என ஊழியர்களை கேட்டு கொண்டார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், "ட்விட்டரின் சேவையால் மக்கள் வசதியாக உணர வேண்டும். இதற்காக, நிறுவனம் சமநிலையில் நடந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால், மக்கள் ட்விட்டரை பயன்படுத்த மாட்டார்கள்" என்றார்.

ஆட்குறைப்பு

ஆட்குறைப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், "இந்த யோசனையை நிராகரித்து விட முடியாது. நல்ல ஆரோக்கியத்துடன் ட்விட்டர் இருக்க வேண்டும். குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக இருக்கும் எவரும் கவலைப்பட வேண்டியதில்லை. எந்தவொரு பணி நீக்கங்களும் செயல்திறன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும். நிறுவனத்தின் கவனம் லாபத்தை ஈட்டுதல் மற்றும் தயாரிப்புகளை மேம்படுத்துதல் ஆகியவையாகவே இருக்கும்" என்றார்.

விளம்பரப்படுத்துதல்

மாடலாக விளம்பரம் செய்வதற்கு தான் எதிரானவன் அல்ல என வலியுறுத்திய மஸ்க், "ட்விட்டரின் வணிகத்திற்கு இது மிகவும் முக்கியமானது. ஆனால் விளம்பரங்கள் மற்றும் சந்தாக்கள் இரண்டும் வருவாயை அதிகரிக்க முக்கியம்" என்றார்.

மேலும் பேசிய அவர், "ட்விட்டருக்கு விளம்பரம் மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். நான் விளம்பரத்திற்கு எதிரானவன் அல்ல. நான் அநேகமாக விளம்பரதாரர்களிடம் பேசி, விளம்பரங்கள் முடிந்தவரை பொழுதுபோக்காக இருப்பதை உறுதி செய்வோம்" என்றார்.

விளம்பரங்கள் இல்லாத ட்விட்டராக மாறுவது குறித்து மஸ்க் முன்னதாக பேசியிருந்தார். 

வீட்டிலிருந்து பணிபுரியும் முறை

வீட்டிலிருந்து பணிபுரிவது குறித்து மஸ்க் என்ன நினைக்கிறார் என்பதே பெரும்பாலான ஊழியர்களின் கேள்வியாக இருந்தது. இதுகுறித்து பேசிய அவர், ""சிறந்த பங்களிப்பாளர்கள் மட்டுமே தொலைதூரத்தில் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். இன்னும் நீண்ட காலத்திற்கு வீட்டிலிருந்து பணி புரிய வேண்டும் என பல ஊழியர்கள் நினைக்கின்றனர்" என்றார்.

வேற்றுகிரகவாசிகள்

வேற்றுகிரகவாசிகள் மற்றும் மற்ற விண்வெளி நாகரிகங்கள் குறித்தும் மஸ்க் ஊழியர்களுடன் உரையாடினார். வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரத்தைத் தான் காணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இணையம் வழியாக நடைபெற்ற இக்கூட்டத்தில், எலான் மஸ்க் தாமதமாக கலந்து கொண்டதாகவும் சமையலறையில் இருந்து ஊழியர்களிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும், செல்போன் மூலம் லாக் இன் செய்ததாகவும் கூட்டத்திற்கு மத்தியில் பலமுறை அவரின் இணைப்பு இடையூறுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget