மேலும் அறிய

விண்வெளிக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்ட அடுத்த பணக்காரர் இவர்தானா?

உடன்  கொரிய நட்சத்திரமான TOP மற்றும் டிஜே ஸ்டீவ் அயோகி ஆகியோரை அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கூறியுள்ளார்

ஜப்பானிய கோடீஸ்வரர்களில் மிகவும் கவனிக்கத்தக்கவர் யுசாகு மேசாவா, அவர் தான் நிலவுக்குச் சுற்றுப்பயணம் செல்லும்போது உடன்  கொரிய நட்சத்திரமான TOP மற்றும் டிஜே ஸ்டீவ் அயோகி ஆகியோரை அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு சந்திரனைச் சுற்றி பயணம் செய்ய திட்டமிட்டுள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன எட்டு குழு உறுப்பினர்களில் ஒருவராக அவர்  இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram
 
A post shared by 前澤友作 Yusaku Maezawa (MZ) (@yusaku2020)

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில்தான் அந்த நிறுவனத்தின் ஃபால்கான் ராக்கெட் நான்கு அமெரிக்க சுற்றுலாப்பயணிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அனுப்பும் எலான் மஸ்க்கின் முதல்கட்ட திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. அமெரிக்காவின் ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜாரிட் ஐசக் மேன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் இன்ஸ்பிரேஷன் - 4 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலத்தில் விண்வெளிக்கு பயணம் செய்தனர்.

ப்ளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளித் தளத்திலிருந்து இந்திய நேரப்படி 16 செப்டம்பர் அன்று அதிகாலை 5.32 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் என்.9 என்ற ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. ராக்கெட் விண்ணில் பாய்ந்த 12 நிமிடங்களில் அதன் 2-வது அடுக்கு தனியாகப் பிரிந்து, வெற்றிகரமாக புவியின் நீள்வட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்தது. பூமியிலிருந்து 575கி.மீ உயரத்தில் இந்த விண்கலம் அடுத்த 3 நாட்களுக்குச் சுற்றி வந்தது. மணிக்கு 27,300 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் இந்த விண்கலம், ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருமுறை பூமியை முழுவதுமாக சுற்றி வந்தது. 3 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பிறகு அட்லாண்டிக் கடலில் பால்கான் ராக்கெட் வெற்றிகரமாகத் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது

இது வரை அரசின் மூலம் பயிற்சிபெற்று அதிகாரபூர்வ பயணத்தை மட்டுமே விண்வெளி வீரர்கள் மேற்கொண்டு வந்தனர். முதல் முறையாக, இந்த 4 பேரும் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட முதல் பொதுமக்கள் என்ற சிறப்பை பெற்றார்கள். இந்த விண்வெளிச் சுற்றுலாவில் ஷிப்ட்4 பேமெண்ட் நிறுவனத்தின் நிறுவனர் ஜார்ட் ஐசக்மேன், செயின்ட் ஜூட் மருத்துமனையின் 29வயதான மருத்துவர் ஹேலே ஆர்சனாக்ஸ். ஆர்சனாக்ஸிற்கு எலும்பு புற்றுநோயால் இடதுகால் எடுக்கப்பட்டு, செயற்கைக்கால் பொருத்தப்பட்டுள்ளது.

செயற்கைக்காலுடன் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்ணும் ஆர்சனாக்ஸ்தான். இந்தப் பயணத்துக்காக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் கிறிஸ் செம்ப்ரோஸ்கி, சியான் ப்ராக்டர் ஆகியோர் சென்றுள்ளனர். இதில் கிறிஸ் செம்ப்ரோஸ்கி அமெரிக்க விமானப்படைமுன்னாள் வீரர் தற்போது டேட்டா பொறியாளராக பணியாற்றி வருகிறார். 51வயதான சியான் பிராக்டர் ஒரு புவிஅறிவியல் வல்லுநர், கடந்த 2009ம் ஆண்டே நாசாவுக்கு பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர் தற்போது கல்லூரி பேராசிரியராக உள்ளார்.

இந்த விண்வெளிச் சுற்றுலாவுக்காக இவர்கள் 4 பேரும் 9 மாதங்கள் ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். புவிஈர்ப்பு சக்தியில்லாத இடத்தில் எவ்வாறு நடந்து கொள்வது, எவ்வாறுபயணிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் இவர்கள் 4 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் முழுவதும் தானியங்கி என்பதால், இந்த 4 பேரைத் தவிர விண்கலத்தில் எந்த விண்வெளி வீரர்களும் உடன் செல்லவில்லை. இந்த விண்வெளிச்சுற்றுலா மூலம் திரட்டப்படும் 20 கோடி டாலர்கள் குழந்தைகளுக்கான புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சிக்கு வழங்கப்பட உள்ளது. இந்த பயணத்துக்கு தலைமை ஏற்றுள்ள கோடீஸ்வரர் ஐசக்மேன் தனியாக 10 கோடி டாலர்களை டென்னஸி நகரில் உள்ள செயின்ட் ஜூட் குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இந்த விண்வெளிப் பயணம் குறித்த சிறப்புத் தொகுப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆவணப்படமாக வெளியிடவுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
Embed widget