மேலும் அறிய

IVF Treatment: அடப்பாவிங்களா.. குழந்தை பிறப்பிலும் ஊழலா? - சிகிச்சைக்கு சென்ற இடத்தில் கோளாறு!

திரும்பும் திசையெங்கும் தனியார் கருத்தரித்தல் மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் இதில் சில நேரங்களில் குழப்பங்களும் ஏற்படும். அப்படியான ஒரு சம்பவம் ஒன்று தான் வடக்கு சைப்ரஸ் நாட்டில் நடைபெற்றுள்ளது. 

வடக்கு சைப்ரஸ் நாட்டில் IVF சிகிச்சை மையங்களில் நடந்த கோளாறு காரணமாக குழந்தைகள் பிறப்பில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாடுகள் எழுந்துள்ளது. 

குழந்தை பிறப்பு என்பது பல்வேறு சூழல் காரணமாக இன்றைய காலக்கட்டத்தில் சிலருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. உடல் ரீதியான மாற்றம் தொடங்கி உணவுகள், சுற்றுச்சூழல் போன்றவையும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் பலரும் செயற்கை கருவுறுதல் சிசிச்சை முறையை மேற்கொள்கின்றனர். உடலுறவு கொள்ளாமல் பெண்ணின் கருப்பையில் விந்தணுவை நேரடியாக செலுத்தி கருத்தரிக்க செய்யும் முறையும் இதில் உள்ளது. அதேசமயம் சம்பந்தப்பட்ட ஆணின் விந்தணு அல்லது பெண்ணின் கருமுட்டையை பயன்படுத்தி தானம் செய்பவர்களின் விந்தணு அல்லது கருமுட்டை மூலம் குழந்தையை கருத்தரிக்க செயல்முறையும் சிகிச்சையில் உள்ளது. 

திரும்பும் திசையெங்கும் தனியார் கருத்தரித்தல் மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் இதில் சில நேரங்களில் குழப்பங்களும் ஏற்படும். அப்படியான ஒரு சம்பவம் ஒன்று தான் வடக்கு சைப்ரஸ் நாட்டில் நடைபெற்றுள்ளது. 

லாரா மற்றும் பெத் என்ற தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் அவர்கள் இரண்டு குழந்தைகள் வேண்டும் என எண்ணினர். அதற்காக IVF எனப்படும் சிகிச்சையை மேற்கொண்டனர். இது கருப்பைகளிலிருந்து கருமுட்டைகள் எடுக்கப்பட்டு, ஆய்வகத்தில் விந்தணுக்களால் கருவுறச் செய்யப்படும் ஒரு சிகிச்சையாகும். இப்படியாக அவர்களுக்கு கேட் என்ற பெண் குழந்தை பிறந்தது. தம்பதியினர் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து இரண்டாவதாக ஜேம்ஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. 

ஆனால் காலப்போக்கில் ஜேம்ஸின் உடல்மொழி, நடவடிக்கை, நிறம் ஆகியவற்றில் அடுத்தடுத்து மாற்றங்கள் ஏற்படுவதை லாரா மற்றும் பெத் கண்டறிந்தனர். இது அவர்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தவே சம்பந்தப்பட்ட சிகிச்சை மையத்தை தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளனர். 

இரு குழந்தைகளின் செயல்முறையும் வித்தியாசமாக இருப்பதால் டி.என்.ஏ பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். அதனுடைய முடிவுகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. அதாவது இரு குழந்தைகளுக்கும் மரபணு ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை என்பதும், உயிரியல் ரீதியாகத் தொடர்புடையவர்கள் அல்ல என்பது தெரிய வந்தது. இரண்டு வெவ்வேறு விந்தணுக் கொடையாளிகள் இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இது லாரா மற்றும் பெத் தம்பதியினருக்கு மிகப்பெரிய அளவில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் குழந்தைகளின் அடையாளம் மற்றும் உடல்நலத்திற்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.  இந்த விந்தணுக்கள்  புகழ்பெற்ற டேனிஷ் விந்தணு வங்கியிலிருந்து பெறப்படும் என சிகிச்சை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் யாருமே இந்த விஷயத்தில் பொறுப்பேடுத்துக் கொள்ள மறுப்பது மன உளைச்சலை உண்டாக்கியுள்ளதாக தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இதுபோன்று ஏழு குழந்தைகள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
Embed widget