மேலும் அறிய

Peshawar Bomb Blast: பாகிஸ்தானில் பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவம்.. பலி எண்ணிக்கை 83ஆக உயர்வு

பெஷாவரில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெஷாவரில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில், வடமேற்கு நகரமாக,  ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பெஷாவரில் உள்ள மசூதியில்  நேற்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது மதியம் 1.40 மணியளவில் திடீரென அங்கு குண்டு வெடித்தது. தொழுகையில் ஈடுபட்டிருந்த  பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலில் மசூதி கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 83 பேர் உயிரிழந்த நிலையில், 100 க்கும் மேற்பட்டோர்  காயமடைந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மசூதியானது போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் அமைந்திருந்ததாகவும், குண்டுவெடிப்பு நடந்த போது உள்ளே சுமார் 260 பேர் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. 

அதேசமயம் கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. 

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட தனது சகோதரரும், தெஹ்ரீக்-இ-தலிபானின் தளபதியுமான உமர் காலித் குராசானியின் மரணத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே இந்த தற்கொலைப்படை தாக்குதல் என்று அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) எனப்படும் தீவிரவாத அமைப்பு, கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானில்  இஸ்லாமிய சட்டங்களை கடுமையாக அமல்படுத்தவும், அரசாங்கக் காவலில் உள்ள அந்த அமைப்பின் உறுப்பினர்களை விடுவிக்கவும் கூறி பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இந்த சம்பவம் உள்ளது. இது பாகிஸ்தானின் மீதான தாக்குதலுக்குக் குறைவானதல்ல, பயங்கரவாதம்தான் நமது தேசிய பாதுகாப்புக்கு முக்கிய சவாலாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றார். மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
Russia Ukraine War End.?: அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
Election Commission: SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
Russia Ukraine War End.?: அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
Election Commission: SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
Embed widget