Money Heist - BERLIN: மணி ஹெய்ஸ்ட் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. டிசம்பரில் வருகிறார் மாஸ்டர் மைண்ட் பெர்லின்..!
நெட்ஃபிலிக்ஸில் ரிலீஸாகி மெகா ஹிட் அடித்த சீரிஸ் மணி ஹெய்ஸ்ட், அந்த தொடரில் முக்கிய கதாப்பாத்திரமான பெர்லின் வைத்து ஸ்பின் ஆஃப் சீரிஸ் எடுத்து வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெட்ஃபிலிக்ஸில் ரிலீஸாகி மெகா ஹிட் அடித்த சீரிஸ் மணி ஹெய்ஸ்ட், அந்த தொடரில் முக்கிய கதாப்பாத்திரமான பெர்லின் வைத்து ஸ்பின் ஆஃப் சீரிஸ் எடுத்து வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
BELLA CHILLAO because BERLIN is coming to Netflix this December 🕺💃 pic.twitter.com/P76715wFwD
— Netflix India (@NetflixIndia) February 7, 2023
உலக அளவில் மக்கள் தற்போது படங்களில் கவனம் செலுத்தும் நேரத்தை விட வெப் சீரிஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் உலக மக்கள் அனைவருக்கும் பிடித்தமான தொடர் மணி ஹெய்ஸ்ட்.
புரபசர் தலைமையில் பணம் திருடுவது கதை. இதை கேட்டவர்கள் என்னது வெறும் பணத்தை திருடுவதற்காகவா இந்த தொடர் கொண்டாடப்பட்டு வருகிறது என கேட்கலாம். இவர்கள் திருடும் இடம் சாதாரணமானது இல்லை, பணம் அச்சிடும் இடம். மிகவும் பாதுகாப்பு பொருந்திய கட்டங்களில் இவர்கள் எப்படி திருடுகிறார்கள் என்பதே கதையாகும்.
ஒவ்வொரு சீசனிலும் பல ட்விஸ்டுகளுடன் பரபரப்பு குறையாமல் இருக்கும். 5 சீசன் வெளியாகி உலக அளவில் மெகா ஹிட் ஆன சீரிஸ் மணி ஹெய்ஸ்ட். சீசன் 2, சீசன் ஒன்றின் தொடர்ச்சியாகும். வங்கியில் பணத்தை லாவகமாக திருடிச் செல்லும் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. சீசன் 2ல் பெர்லின் என்ற முக்கிய கதாப்பாத்திரம் இறந்துவிடுவார். மேலும் ரக்கேல் என்ற பெண் போலீஸ் அதிகாரி புரபசருடன் காதல் வயப்பட்டு, அவருடன் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வார். இந்த கொள்ளைக்கு மூலதனமாக செயல்பட்டது பெர்லின் என்பது குறிப்பிடத்தக்கது.
3வது சீசன் என்பது முற்றிலும் மாறுபட்ட கதை, கொள்ளையடித்த பணத்தை எடுத்து தப்பிச் சென்ற ரியோ போலீசாரிடம் மாட்டிக்கொண்டு அவரை மீட்பதற்காக புரபசர் தலைமையில் மேலும் ஒரு கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிடுவது தான் இந்த தொடர். ஆனால் இந்த முறை பணம் அல்ல அதுக்கும் மேல – தங்கம். ஆனால் இந்த கொள்ளை திட்டம் புரபசருடையது அல்ல. இது இறந்த பெர்லினின் கனவுத்திட்டம். அவரது கனவுத்திட்டத்தை புரபசர் நிறைவேற்றும் வகையில் இதனை சூசகமாக முடிப்பார்.
ஐந்தாவது சீசனின் முதல் வால்யூம் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமும், இறுதி வால்யூம் டிசம்பர் மாதமும் வெளியானது. 4வது சீசனில் நைரோபி என்ற முக்கிய கதாப்பாத்திரம் இறக்கும் காட்சி ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதே போல் இறுதி சீசனில் மணி ஹெய்ஸ்ட் சீரிஸின் இரண்டாவது கதாநாயகி என சொல்லப்படும் டோக்கியோ இறந்துவிடுவார்.
மணி ஹெய்ஸ்ட் முடிவடைந்துவிட்டதே என்று ரசிகர்கள் வருத்தப்படும் அளவுக்கு அதன் திரைக்கதை இருந்தது. திரைக்கதை மட்டுமின்றி அதில் நடித்தவர்களும் ரசிகர்களோடு ஒன்றி போயிருந்தனர்.
ஆனால் இந்த கொள்ளை சம்பவங்களுக்கு மூலையாக செயல்பட்டவர் பெர்லின். பெர்லின் 2வது சீசனில் இறந்துவிட்டலும், அதனை தொடர்ந்து வரும் சீசனில் அவ்வப்போது கற்பனைக் கதாப்பாத்திரமாக வந்து அசத்தியிருப்பார். பெர்லின் என்ற கதாப்பாத்திரம் உலகம் முழுவதும் மக்களால் கொண்டாடப்பட்டது.
தற்போது பெர்லின் கதாப்பாத்திரத்தை வைத்து ஸ்பின் ஆஃப் சீரிஸ் (spinoff series) எடுக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை உறுவாக்கியுள்ளது. இந்த சீரிஸ் டிசம்பர் மாதம் நெட்ஃபிலிக்ஸில் ரிலீஸ் ஆக உள்ளது.