Ceasefire: விடியலை பார்க்கவுள்ள மக்கள்! இஸ்ரேல் - ஹமால் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.!
Israel-Hamas Ceasefire Comes Into Effect: இஸ்ரேல் - ஹமால் இடையிலான போர் , ஓராண்டுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்து நிலையில் இன்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது

இஸ்ரேல் - ஹமால் இடையில் , சுமார் 15 மாதங்களுக்கு மேலான தொடர் போர் நடைபெற்று வந்து நிலையில் தற்போது , இன்று மதியம் போர் நிறுத்தமானது அமலுக்கு வந்தது. இதையடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பிடிக்கப்பட்டு வைத்திருந்த மக்களை திருப்பி அனுப்புவதற்காக , சிலரின் பெயர்களை ஹமாஸ் அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதையடுத்து இரு தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்துளனர்.
Israel has received the list of the hostages who are due to be released today according to the framework. The security establishment is now checking the details: Prime Minister of Israel pic.twitter.com/2GWTXJ1bGJ
— ANI (@ANI) January 19, 2025
போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்:
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் முதல் கட்டம் , உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை ஒப்புக்கொள்ளப்பட்ட நேரமான 6.30 GMT க்கு பதிலாக தாமதமாக 11:15 மணிக்குத் தொடங்கியதாக தகவல் தெரிவிக்கின்றன.
அதற்கு காரணமாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக வெளியிடும் பணயக்கைதிகள் பட்டியலை ஹமாஸ் தனது அரசாங்கத்திற்கு கொடுக்கும் வரை காஸாவில் போர் நிறுத்தம் தொடங்காது என்று எச்சரித்ததாகவும், அதனால்தான் போர் நிறுத்தம் தாமதாக இன்று தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும், "தொழில்நுட்ப மற்றும் பிராந்திய காரணங்களால்" தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஹமாஸ் தெரிவித்தது. இதையடுத்து, பணயக்கைதிகள் சிலரின் பெயரை வெளியிட்டது. இதையடுத்து போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
இஸ்ரேல் அமைச்சர் ராஜினாமா
இதையடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிர்பு தெரிவித்து, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் ஜிவிர், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணி அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது கட்சியின் கேபினட் அமைச்சர்களும் தங்கள் ராஜினாமாவை சமர்ப்பித்தனர்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை "பொறுப்பற்றது" என்றும், அது "நூற்றுக்கணக்கான கொலைகார பயங்கரவாதிகளை விடுவிக்கும் செயல்" என்றும் ஜிவிர் குற்றம் சாட்டினார்.
ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் இன்று தொடங்குகிறது. இந்த கட்டம் மொத்தம் 42 நாட்கள் இருக்கும். இஸ்ரேலின் 98 ஹமாஸ் பணயக்கைதிகளில் 33 பேரை விடுவிப்பார்கள். இஸ்ரேல் 737 கைதிகளை விடுவிக்கவுள்ளது. பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக்கொள்ள மூன்று பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகள் கெரிம் ஷாலோம், அரேஸ் மற்றும் ரீம் ஆகியவற்றில் இருக்கும். விடுவிக்கப்பட்டவர்களை பரிசோதிக்க மருத்துவர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் இங்கு இருப்பார்கள்.
ஒப்பந்தத்தின்படி, இந்த 42 நாட்களில், காஸாவின் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக வெளியேறத் தொடங்கும். இந்தப் பகுதிகளில் இருந்து இராணுவம் வெளியேறிய பின்னரே இங்கு வசிப்பவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியும். அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளும் விடுவிக்கப்படும் வரை இஸ்ரேலிய துருப்புக்கள் காஸாவிலிருந்து முழுமையாக வெளியேறாது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் 16-ம் தேதியில் இருந்து தொடரும் என்று தகவல் தெரிவிக்கின்றன
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

