மேலும் அறிய

US Iran War: ஈரான் மீதான போரை நிறுத்த முடிவுக்கு வந்த ட்ரம்ப்.. பெருமூச்சுவிடும் உலக நாடுகள்!

Iran War Latest News in Tamil: போரை 2-3 வாரங்களில் முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான தகவலை ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானால் அணு ஆயுதத்தைக் கண்டுபிடிக்க முடியாது என்று நாங்கள் உணரும்போது வெளியேறுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்காவால் நிறுத்த முடியும்  என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. கிட்டதட்ட ஒரு மாதத்தை கடந்த இந்த போரால் கடுமையான பாதிப்புகளை உலக நாடுகள் சந்தித்து வருகிறது. குறிப்பாக உலக நாடுகளின் எரிபொருள் வழிபாதையாக அறியப்படும் ஹோர்முஸ் ஜலசந்தியை போர் காரணமாக ஈரான் மூடியுள்ளதால் பல நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் எரிசக்தி விநியோகத்தைச் சீர்குலைத்து உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ள போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு ஒப்பந்தம் அவசியமில்லை என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஈரான் தரப்பில் போரை நிறுத்த ஒப்பந்தம் போட விரும்புகிறது என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் ட்ரம்பின் அறிவிப்பு ராஜதந்திர முன்னெடுப்பு என்றும், எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். 

இப்படியான நிலையில் தான் போரை 2-3 வாரங்களில் முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான தகவலை ட்ரம்ப் தெரிவித்துள்ளார் அவர்களால் அணு ஆயுதத்தைக் கண்டுபிடிக்க முடியாது என்று நாங்கள் உணரும்போது, ​​நாங்கள் வெளியேறிவிடுவோம் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய வெளியுறவுக் கொள்கை நிபுணரான டிரிட்டா பார்சி, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற ஒரு மோதலில் இருந்து டிரம்ப் அவ்வளவு எளிதாக வெளியேறிவிட முடியாது என்றும், இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை ஈரான் மற்றும் லெபனானில் நிகழ்ந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். 

முதலில் இந்தப் போர் நான்கு நாட்களில் முடிந்துவிடும் என்று சொன்னார்கள். பின்னர் மூன்று வாரங்கள் ஆகும் என்று சொன்னார்கள். இப்போது இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்களில் முடியும் என சொல்கிறார். இந்தப் போர் இனி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், காலக்கெடு நீட்டிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது” என்று டிரிட்டா பார்சி தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் போரை நிறுத்தாவிட்டால் அது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்ற ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அப்படியான சூழலில் அவர் ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் ஈரான் போரில் அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த சமீபத்திய தகவல்களை அவர் பகிர்ந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Embed widget