மேலும் அறிய

Iran Vs Trump: இறுதியாக எச்சரித்த ட்ரம்ப்; பதிலடி கொடுத்த ஈரான்; இன்னும் தில்லாதான் நிக்குறாங்க.! என்ன ஆகுமோ.?

ஈரானை நோக்கி கூடுதல் படைகள் விரைவதாகவும், ஒப்பந்தம் குறித்து பேச வரவில்லை என்றால் தாக்குதல் நடக்கும் என்றும் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்த நிலையில், ஈரான் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் அல்லது கடந்த ஜூன் மாதம் தான் உத்தரவிட்ட தாக்குதலை விட மிக மோசமான ராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானை நேற்று தனது பதிவின் மூலம் எச்சரித்தார். இதற்கு பதிலளித்துள்ள ஈரான், பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம் கொடுக்கப்பட்டால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதிலளிக்கும் என்று எச்சரித்துள்ளது.

ஈரான் என்ன கூறியுள்ளது.?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது ட்ரூத் சோசியல் பக்கம் மூலம் நேற்று விடுத்த எச்சரிக்கைக்கு பதிலளித்துள்ள ஈரான், பரஸ்பர மரியாதை அடிப்படையில் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக கூறியது. “ஆனால்,  அழுத்தம் கொடுக்கப்பட்டால், அது தன்னைத் தற்காத்துக் கொள்ளும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதிலளிக்கும்" என்று எச்சரித்துள்ளது.

ஈரான் தனக்கு எதிரான எந்த ஒரு ஆக்கிரமிப்பிற்கும் உடனடியாக தக்க பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு நடந்த 12 நாட்கள் போரில், அமெரிக்கா தங்களிடம் தக்க பாடங்களை கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

அதோடு, தங்கள் துணிச்சலான ஆயுதப் படைகள், தங்கள் அன்பான நிலம், வான் மற்றும் கடல் மீதான எந்த ஒரு ஆக்கிரமிப்பிற்கும் உடனடியாகவும், சக்திவாய்ந்ததாகவும் பதில் கொடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அணுசக்தி தொழில்நுட்பத்திற்கான ஈரானின் உரிமைகளை உறுதி செய்தால், நியாயமான மற்றும் சமமான அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும் அரக்சி தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை என்ன.?

நேற்று தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஒரு பெரிய ஆர்மடா ஈரானை நோக்கிச் செல்கிறது. அது மிகுந்த சக்தி, உற்சாகம் மற்றும் நோக்கத்துடன் விரைவாக நகர்கிறது. இது வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்டதை விட, சிறந்த விமானம் தாங்கி கப்பல் ஆபிரகாம் லிங்கன் தலைமையிலான ஒரு பெரிய கடற்படை. வெனிசுலாவைப் போலவே, இதுவும் தயாராக, விருப்பத்துடன், தேவைப்பட்டால், வேகம் மற்றும் வன்முறையுடன் அதன் பணியை விரைவாக நிறைவேற்ற முடியும். ஈரான் விரைவாக "மேசைக்கு வந்து" ஒரு நியாயமான மற்றும் சமமான ஒப்பந்தத்தை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தும் என்று நம்புகிறோம் - அணு ஆயுதங்கள் கூடாது - அனைத்து தரப்பினருக்கும் நல்லது. நேரம் முடிந்துவிட்டது, அது உண்மையிலேயே சாராம்சமானது! நான் முன்பு ஒருமுறை ஈரானுக்குச் சொன்னது போல், ஒரு ஒப்பந்தம் செய்யுங்கள்! ஆனால், அவர்கள் செய்யவில்லை. அதனால் "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" இருந்தது. இது ஈரானுக்கு ஒரு பெரிய அழிவு. அடுத்த தாக்குதல் மிகவும் மோசமாக இருக்கும்! அதை மீண்டும் நடக்கச் செய்யாதீர்கள்.“ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தான், ஈரான் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. இப்படி இரு நாடுகளும் விடாப்பிடியாய் இருக்கும் நிலையில், போர் ஏற்படுவதற்கான சூழலே நிலவுவதாக உலக நாடுகள் கருதுகின்றன. ட்ரம்ப் இதற்கு என்ன எதிர்வினையாற்றப் போகிறார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.

 

 

தலைப்பு செய்திகள்

Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget