மேலும் அறிய

Iran Israel Conflict: இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்.. அமெரிக்காவையும் எச்சரித்த ஈரான்.. என்ன நடக்கிறது..?

இஸ்ரேல் நாட்டின் மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளது ஈரான்.

இஸ்ரேல் நாட்டின் மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. சிரியாவில் உள்ள தங்கள் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாகவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா விலகியே இருக்க வேண்டும் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நாளுக்குநாள் போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று இரவு ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது. இந்த தாக்குதலின்போது அமெரிக்கா சில ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்காவும் பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.

இதற்கு ஒருநாள் முன்னதாக ஓமன் வளைகுடாவில் இருந்து ஹோர்மஸ் கணவாய் வழியாக இந்தியா வந்த சரக்கு கப்பலை ஈரான் ராணுவம் சிறை பிடித்தது. அந்த சிறை பிடிக்கப்பட்ட கப்பலில் 17 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் படையினர் சிறைபிடித்த கப்பலில் உள்ள 17 இந்திய மாலுமிகளை விரைந்து மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டெல்லி மற்றும் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள தூதரகங்கள் மூலம், இந்த விவகாரத்தை ஈரான் அதிகாரிகளிடம் இந்தியா கொண்டு சென்றுள்ளது. விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு மீட்கும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ராய்ட்டர்ஸ் இதழின் கூற்றுப்படி, இஸ்ரேலில் நேற்று இரவு திடீரென சைரன்கள் ஒலிக்க தொடங்கின. தொடர்ந்து, அடுத்தடுத்து வெடி சத்தங்கள் நிகழ்ந்துள்ளது. இதில், இதுவரை உயிர்ச்சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஈரானில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

இதனிடையே ஈரானின் ஆணவத்துக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் ராணுவம் தயாராக உள்ளதாகவும், பல ஆண்டுகளாக ஈரானின் நேரடி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது என்றும் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இஸ்ரேலுடன் அமெரிக்கா நிற்பதையும், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பல நாடுகளின் ஆதரவையும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். எங்களுக்கு யார் தீங்கு விளைவித்தாலும், நாங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்போம். எந்தவொரு அச்சுறுத்தலுக்கு எதிராக நாங்கள் நம்மை பாதுகாத்துக் கொள்வோம். கடவுளின் உதவியோடு நாம் ஒன்றுபட்டு நிற்போம். நம் எதிர்கள் அனைவரையும் வெல்வோம்.” என்று தெரிவித்தார்.  

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு: 

தகவலின்படி, ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை எச்சரித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து நிற்பதாக உறுதியளித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ஓய்வுபெற்ற இஸ்ரேலிய ஜெனரல் அமோஸ் யாட்லின், ஈரானிய ட்ரோன்கள் ஒவ்வொன்றும் 20 கிலோகிராம் (44 பவுண்டுகள்) வெடிபொருட்களுடன் ஆயுதம் ஏந்தியிருப்பதாக கூறப்படுகிறது. 

ஈரான் தாக்குதல் நடத்தியது ஏன்..? 

கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது வான்வழித் தாக்குதலில் ஒரு மூத்த ஜெனரல் அதிகாரி உட்பட ஏழு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பேற்க வேண்டும் என ஈரான் குற்றம் சாட்டியது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்”  ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்” ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
Embed widget