Iran Punishment: தூக்கிலிடப்பட்ட தற்பாலீர்ப்பாளர்கள்.. தண்டனை நிறைவேற்றிய ஈரான்.. ஆம்னெஸ்டி அறிக்கை..
ஈரானில் தற்பாலீர்ப்பாளர்களாக இருப்பது சட்டவிரோதமானது.
தூக்கிலிடப்பட்ட ஆண் தற்பாலீப்பாளர்களுக்கு, அறிவித்து 6 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது
ஈரானில் ஆண் தன்பாலீர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - ஈரான் தன்பாலீர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை நிறைவேறியுள்ளது. அவர்கள் ஆறு ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளனர். ஈரானில் தன்பாலீர்ப்பு சட்டவிரோதமானது. இது லெஸ்பியன், தன்பாலீர்ப்பு, இருபால் மற்றும் திருநங்கைகளுக்கு உலகின் மிகவும் அடக்குமுறை இடமாக கருதப்படுகிறது.
மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, அந்த இருவரும் மெஹர்தாத் கரீம்பூர் மற்றும் ஃபரித் முகமதி என அடையாளம் காணப்பட்டனர். "இரண்டு ஆண்களுக்கு இடையே உடலுறவு கொண்டதற்காக" அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் (310 மைல்) தொலைவில் உள்ள வடமேற்கு நகரமான மராகேவில் உள்ள சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
கடந்த ஜூலை மாதம், மராகேயில் இதே குற்றச்சாட்டில் மேலும் இருவர் தூக்கிலிடப்பட்டனர் என்று குழு கூறியது. கடந்த ஆண்டு, ஈரான் 299 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றியது. மேலும் 2021 இல் ஈரான் 85 பேருக்கு மரண தண்டனை விதித்தது.
கடந்த அக்டோபரில், ஈரானில் மனித உரிமைகள் மீதான ஐ.நா.வின் சுயாதீன புலனாய்வாளர் ஜாவைத் ரெஹ்மான், ஐ.நா பொதுச் சபையின் மனித உரிமைக் குழுவிடம், ஈரான் மரண தண்டனையை "அபயகரமான விகிதத்தில்" தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.
ஈரானிய சட்டத்தின் கீழ், ஆண்பால் உறவு, பாலியல் வன்கொடுமை, பாலியல் தொழில், ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் கொலை ஆகியவை மரண தண்டனைக்கு வழிவகுக்கும் குற்றங்களில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Iran's authorities must immediately release gender nonconforming human rights defender Zahra Sedighi-Hamadani, unjustly detained since Oct 2021 due to her real or perceived sexual orientation and gender identity & her public defence of #LGBTI rights. https://t.co/GXJjVX2bYi pic.twitter.com/Oqppqna9DC
— Amnesty Iran (@AmnestyIran) January 25, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்