மேலும் அறிய

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்! கைதாகிறாரா இஸ்ரேல் PM நெதன்யாகு? சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

காசாவில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் மனிதகுலத்திற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவும் கூறி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-க்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

போர் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் மனிதகுலத்திற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவும் கூறி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட், ஹமாஸ் அமைப்பின் முன்னணி தலைவர்களில் ஒருவரான முகமது தியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரி உள்ளிட்டவர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

கைது செய்யப்படுவாரா நெதன்யாகு?

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர், உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி வருகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே, கடந்த 2023ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி, மோதல் தொடங்கியது.

தாக்குதலை ஹமாஸ் தொடங்கியிருந்தாலும், அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்தி வரும் போர், அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளது. போரால் வாழ்க்கையை இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக உள்ள பாலஸ்தீனியர்கள்.

இந்த நிலையில், காசா போர் தொடர்பாக அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் மற்றும் காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கை ஆகியவற்றுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக பிடிவாரண்ட் கோருவதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் கரீம் கான் கடந்த மே 20 ஆம் தேதி கூறினார்.

சர்வதேச நீதிமன்றம் அதிரடி:

இதையடுத்து, இன்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பில், "காசாவில் பொதுமக்கள் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத பொருள்களான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவப் பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சாரம் உள்ளிட்டவற்றை இரு தரப்பினரும் வேண்டுமென்றே, தெரிந்தே பறித்துள்ளனர் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. நீதிமன்றத்தின் அதிகார வரம்பை இஸ்ரேல் ஏற்க வேண்டிய அவசியமில்லை" என குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை நிராகரித்துள்ள இஸ்ரேல், காசாவில் போர்க்குற்றங்களை மறுத்துள்ளது. வான்வழித் தாக்குதலில் அல்-மஸ்ரி கொல்லப்பட்டதாக அது தெரிவித்துள்ளது. ஆனால், அல்-மஸ்ரி கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை ஹமாஸ் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

கடந்த ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி முதல் காசாவில் நடந்து வரும் மோதலில் குறைந்தது 44,056 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்ததாக கூறினால் நடவடிக்கை” அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி அறிவிப்பு
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
Thirumavalavan : ”ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டில் இருக்கிறேனா?” உண்மையை உடைத்தார் திருமாவளவன்..!
Thirumavalavan : ”ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டில் இருக்கிறேனா?” உண்மையை உடைத்தார் திருமாவளவன்..!
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை; ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்வு பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை; ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்வு பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலைThirumavalavan | ”ஆதவ் கட்டுப்பாட்டில் நானா?திமுகவை பார்த்தால் பயமா?” திருமா ஒப்புதல் வாக்குமூலம்Aadhav Arjuna | ஆதவ் அர்ஜுனாவுடன் விஜய் மேடையில் பேசப்போகும் அரசியல் உற்றுநோக்கும் திமுக! | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்ததாக கூறினால் நடவடிக்கை” அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி அறிவிப்பு
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
Thirumavalavan : ”ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டில் இருக்கிறேனா?” உண்மையை உடைத்தார் திருமாவளவன்..!
Thirumavalavan : ”ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டில் இருக்கிறேனா?” உண்மையை உடைத்தார் திருமாவளவன்..!
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை; ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்வு பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை; ஊரகத்‌ திறனாய்வுத்‌ தேர்வு பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு
Chennai:
Chennai: "ஒரு வருஷத்துக்கு கவலை வேண்டாம்" சென்னைக்கு வராது தண்ணீர் பஞ்சம் - அடித்துச் சொல்லும் அதிகாரிகள்
அம்பேத்கர் பற்றி பெரியார் சொன்ன வார்த்தை : நினைவு தினத்தில் பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின் 
அம்பேத்கர் பற்றி பெரியார் சொன்ன வார்த்தை : நினைவு தினத்தில் பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின் 
அந்த மாட்டு சந்தை என்ன விலை? பால்பண்ணை ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்! ஒரே இரவில் கோடீஸ்வரர்! 
அந்த மாட்டு சந்தை என்ன விலை? பால்பண்ணை ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்! ஒரே இரவில் கோடீஸ்வரர்! 
TVK Vijay: திருமா புறக்கணித்த விழாவில் விஜய்! இன்று என்ன பேசப்போகிறார் தளபதி? உற்றுப்பார்க்கும் தி.மு.க.
TVK Vijay: திருமா புறக்கணித்த விழாவில் விஜய்! இன்று என்ன பேசப்போகிறார் தளபதி? உற்றுப்பார்க்கும் தி.மு.க.
Embed widget