Indonesia Dome collapses: இந்தோனேசியா: திடீர் தீ விபத்து; இடிந்து விழுந்த மசூதி கோபுரம் - வீடியோ..
இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் உள்ள மசூதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மசூதி கோபுரம் இடிந்து விழுந்தது.
இந்தோனேசியாவில், ஜகார்த்தா இஸ்லாமிய மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மசூதி கோபுரம் இடிந்து விழுந்தது.
இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள இஸ்லாமிய மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இஸ்லாமிய மையத்தில், திடீரென பற்றிய நெருப்பானது மசூதி கோபுரம் முழுவதும் பரவியது. பின்னர் கோபுரம் முழுவதும் நெருப்பு பற்றிய நிலையில், கோபுரம் சரிந்து விழுந்தது.
Detik2 ambruknya kubah masjid islamic center koja, jakarta utara akibat kebakaran pic.twitter.com/HRjaIDGeQX
— Mas Banyu (@AlasBanjaran) October 19, 2022
மசூதி கோபுரம் சரிந்து விழும் வீடியோ:
இந்நிலையில், மசூதி கோபுரம் சரிந்து விழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், மசூதி கோபுரம் வெடித்து சிதறுவதை காண முடிகிறது. மேலும் அப்பகுதியின் சாலைகளில் நெருப்பு துண்டுகள் பறந்து விழுவதையும் காண முடிகிறது. இதனால், அப்பகுதியில் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
Semoga Pak Heru Budi bisa ambil tindakan cepat memulihkan, membangun kembali Islamic Center di Koja. Atau @basuki_btp melalui Pertamina bisa mengalokasikan CSR untuk pembangunan kembali area yang terbakar. pic.twitter.com/eo9rZzufO7
— lyn ۞ (@lhayesno) October 19, 2022
அதிகாரிகள் தகவல்:
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், தீ எவ்வாறு பற்றியது தொடர்பான காரணங்கள் இதுவரை தெரியவில்லை. மேலும் இந்த விபத்தில் யாரும் உயிர் இழக்கவில்லை.
பாதுகாப்பு பணியாளர்கள் கூறும் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றவும். அப்பகுதியின் அருகே குடியிருப்பு வாசிகள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி கொள்ளவும். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்தும் வரை அந்த பகுதிக்கு, பொதுமக்கள் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.