மேலும் அறிய

"சட்டவிரோதமாக எல்லையை கடக்க வேண்டாம்; மனம் பதறுகிறது" - குளிரில் இறந்துபோன இந்திய குடும்பத்தினருக்கு ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல்!

சட்டவிரோதமாக ஒழுங்கற்று எல்லைகளை கடக்க முயற்சிக்க வேண்டாம் என மக்களை கேட்டு கொண்டு வருகிறோம். இது எவ்வளவு ஆபத்து என்பது எங்களுக்கு தெரியும்.

அமெரிக்கா-கனடா எல்லையில், ஒரு கைக்குழந்தை உட்பட நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கனடாவின் மத்திய மானிடோபா மாகாணத்தில் உள்ள எமர்சன் நகரத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில், அமெரிக்க எல்லையில் இரண்டு பெரியவர்கள், ஒரு குழந்தை ஆகியோரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து எல்லையின் இருபுறமும் தேடியதில் நான்காவதாக ஒரு சிறுவனின் உடல் கண்டறியப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட 4 உடல்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்த குடும்பம் இந்தியாவை சேர்ந்தது என்றும் கண்டறிந்தனர். இந்தியர்கள் நால்வர் இறந்ததற்கு கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்து உள்ளார்.

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு உரிய ஆவணங்களின்றி அழைத்துச் செல்லும் கும்பலின் உதவியுடன் இவா்கள் எல்லையைக் கடக்க முயன்றபோது கடுங்குளிரில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கனடாவில் இருந்து எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 5 இந்தியா்களைப் பிடித்து எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அவா்கள், யாரோ ஒருவா் அழைத்துச் செல்வதாக உறுதி அளித்ததால் 11 மணி நேரத்துக்கும் மேலாக நடந்து வந்ததாகக் கூறினா். அவா்களில் ஒருவா் குழந்தைக்குத் தேவையான உடைகள், பொம்மைகள் ஆகியவற்றை பையில் கொண்டு வந்திருந்தார். உயிரிழந்த நால்வரும் இவா்களுடன் வந்திருக்கலாம் என்றும், இரவு நேரத்தில் அவா்கள் பாதை மாறி சென்றிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பணத்துக்காக எல்லையைக் கடக்க உதவும் கும்பலைச் சோ்ந்த ஸ்டீவ் ஷாண்ட் என்பவரை அமெரிக்க காவல் துறையினா் கைது செய்தனா் என உள்ளூர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. சம்பவ இடத்தில் வெப்பநிலை மைனஸ் 35 டிகிரியாக இருந்ததாக கனடா காவல் துறையினா் தெரிவித்தனா். இதற்கிடையே, உயிரிழந்த 4 பேரும் இந்தியா்கள் என கனடாவுக்கான இந்திய துணைத் தூதா் அஜய் பிசாரியா உறுதிப்படுத்தினார். இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "என் அரசு, முடிந்தவரை உதவிகளை செய்து வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து மனித கடத்தலை தடுக்க முயற்சி எடுத்து வருகிறோம். இறந்தவர்களின் கதையை கேட்டால் மனதே பதறுகிறது. மனித கடத்தலால் பாதிக்கப்பட்டு ஒரு குடும்பம் இப்படி இறந்திருப்பதும் மற்றவர்களை பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையை உயர்த்தி கொள்ள நினைப்பவர்களை நினைத்தாலும் பெரும் துயரமாக உள்ளது. எனவேதான், சட்டவிரோதமாக ஒழுங்கற்று எல்லைகளை கடக்க முயற்சிக்க வேண்டாம் என மக்களை கேட்டு கொண்டு வருகிறோம். இது எவ்வளவு ஆபத்து என்பது எங்களுக்கு தெரியும். இதை தடுக்க எங்களால் முடிந்த அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வருகிறோம்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு! பெண்களுக்காக வருகிறது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு! பெண்களுக்காக வருகிறது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்TVK Vijay Meeting: பனையூரில் குவியும் தொண்டர்கள்..100 மா.செ-க்கள் ரெடி! புயலை கிளப்பும் விஜய்!TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு! பெண்களுக்காக வருகிறது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு! பெண்களுக்காக வருகிறது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Los Angeles Wildfires: நரகமாய் மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்..! கட்டுக்கடங்காத காட்டு தீ, உயிர் பயத்தில் மக்கள், முடிவு எங்கே?
Los Angeles Wildfires: நரகமாய் மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்..! கட்டுக்கடங்காத காட்டு தீ, உயிர் பயத்தில் மக்கள், முடிவு எங்கே?
பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை; ஏன்? - நிதி நிலைமையை லிஸ்ட் போட்ட அமைச்சர்!
பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை; ஏன்? - நிதி நிலைமையை லிஸ்ட் போட்ட அமைச்சர்!
சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் - சீமானை தாக்கிய கனிமொழி!
சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் - சீமானை தாக்கிய கனிமொழி!
Embed widget