மேலும் அறிய

MEA Advisory: "ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம்" இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

MEA Advisory: போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கொந்தளிப்பான சூழலில் மத்திய கிழக்கு நாடுகள்:

பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலக நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. போர் நிறுத்தம் கோரி சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்த போதிலும், அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன.

காசா போர் தொடங்கி 6 மாதங்கள் ஆன நிலையிலும், அதன் தீவிரம் குறைந்தபாடில்லை. இதற்கிடையே, ஏப்ரல் 1ஆம் தேதி, சிரியா நாட்டு தலைநகரான டமஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ ஜெனரலும் ஆறு ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இதற்கு பழி தீர்ப்போம் என ஈரான் கூறி வருகிறது. இதுகுறித்து ஈரான் நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறுகையில், "இஸ்ரேலுக்கு தண்டனை கொடுத்தாக வேண்டும். இது ஈரான் மண்ணின் மீதான தாக்குதலுக்கு சமம்" என்றார்.

பதற்றத்தை ஏற்படுத்தும் இஸ்ரேல் தாக்குதல்:

ஈரானின் அச்சுறுத்தல் காரணமாக பிராந்தியத்தின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அமைதி காக்கும்படி ரஷியா, ஜெர்மனி, பிரிட்டன் நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

இந்த நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்படட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தற்போது ஈரான் அல்லது இஸ்ரேலில் வசிக்கும் அனைவரும் அங்குள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கவும், அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அமெரிக்காவும் பிரான்சும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு இதேபோன் அறிவுறுத்தலை வழங்கி இருந்தது. முன்னதாக, ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, சிரியாவில் ஈரான் நாட்டு தூதரக வளாகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கவலை தெரிவித்து கொள்கிறோம்.

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் வன்முறைகள், உறுதியற்ற தன்மையைத் தூண்டும் செயல்களால் இந்தியா வருத்தமடைந்துள்ளது. சர்வதேச சட்டத்தின் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு எதிரான செயல்களைத் தவிர்க்குமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்திருந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajiv Gandhi Death Anniversary: 33வது நினைவு தினம்..! அப்பா ராஜிவ் காந்தி குறித்து ராகுல் நெகிழ்ச்சி
Rajiv Gandhi Death Anniversary: 33வது நினைவு தினம்..! அப்பா ராஜிவ் காந்தி குறித்து ராகுல் நெகிழ்ச்சி
Breaking News LIVE: ஈரான் அதிபர் மரணம் : அரசு கட்டிடங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசிய கொடி
Breaking News LIVE: ஈரான் அதிபர் மரணம் : அரசு கட்டிடங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசிய கொடி
Dengu Fever: டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனை செல்லுங்கள் - பொது சுகாதாரத்துறை இயக்குனர்
டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனை செல்லுங்கள் - பொது சுகாதாரத்துறை இயக்குனர்
IPL 2024 Playoffs: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எலிமினேட்டரும்.. ராசியில்லா சுற்றில் களமிறங்கும் ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எலிமினேட்டரும்.. ராசியில்லா சுற்றில் களமிறங்கும் ஆர்சிபி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

BJP cadre false complaint : பொய் சொன்ன பாஜக பிரமுகர்! உண்மையை உடைத்த கொள்ளையன்! ஆத்திரத்தில் POLICEVeeralakshmi on Vijay Dhanush : ”விஜய், தனுஷ், த்ரிஷா..உடனே டெஸ்ட் எடுங்க”வீரலட்சுமி பரபரப்பு புகார்Akshay kumar first vote : 56 வயதான அக்‌ஷய் குமார்! முதல்முறையாக வாக்களித்தார் காரணம் என்ன?Salem differently abled : மூன்று சக்கர வாகனத்தில் உணவு டெலிவரி! அசத்தும் மாற்றுத்திறனாளி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajiv Gandhi Death Anniversary: 33வது நினைவு தினம்..! அப்பா ராஜிவ் காந்தி குறித்து ராகுல் நெகிழ்ச்சி
Rajiv Gandhi Death Anniversary: 33வது நினைவு தினம்..! அப்பா ராஜிவ் காந்தி குறித்து ராகுல் நெகிழ்ச்சி
Breaking News LIVE: ஈரான் அதிபர் மரணம் : அரசு கட்டிடங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசிய கொடி
Breaking News LIVE: ஈரான் அதிபர் மரணம் : அரசு கட்டிடங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசிய கொடி
Dengu Fever: டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனை செல்லுங்கள் - பொது சுகாதாரத்துறை இயக்குனர்
டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனை செல்லுங்கள் - பொது சுகாதாரத்துறை இயக்குனர்
IPL 2024 Playoffs: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எலிமினேட்டரும்.. ராசியில்லா சுற்றில் களமிறங்கும் ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எலிமினேட்டரும்.. ராசியில்லா சுற்றில் களமிறங்கும் ஆர்சிபி!
Vairamuthu: திருமணம் என்றதும் பெண்கள் பயப்படுகிறார்கள்.. வைரமுத்து சொன்னது என்ன?
திருமணம் என்றதும் பெண்கள் பயப்படுகிறார்கள்.. வைரமுத்து சொன்னது என்ன?
Ramarajan: ஆளே மாறிப்போன கனகா.. பேசச் சென்ற ராமராஜனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
ஆளே மாறிப்போன கனகா.. பேசச் சென்ற ராமராஜனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Asian Relay Championships: 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய ரிலே அணி தங்கம்.. புதிய தேசிய சாதனையும் படைப்பு!
4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய ரிலே அணி தங்கம்.. புதிய தேசிய சாதனையும் படைப்பு!
முன்னாள் அமைச்சருக்கு நேர்ந்த கொடுமை! மனைவி தன்னை பட்டினி போட்டதாக நீதிமன்றத்தில் புகார்!
முன்னாள் அமைச்சருக்கு நேர்ந்த கொடுமை! மனைவி தன்னை பட்டினி போட்டதாக நீதிமன்றத்தில் புகார்!
Embed widget