எலிசபெத் ராணி மறைவுக்கு துக்கம்: ஈஃபிள் டவரில் மின் விளக்குகள் அணைத்து வைப்பு..
எலிசபெத் ராணி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈஃபிள் டவரில் மின் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டது.
எலிசபெத் ராணி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈஃபிள் டவரில் மின் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டது.
ஈஃபிள் டவருக்கு வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சலிமா க்ரெஸ்ஸா, ராணி எலிசபெத் தான் பிரிட்டனை செதுக்கியவர் என்று புகழஞ்சலி செலுத்தினர். வேலரி என்ற பெண், ராணி எலிசபெத்தின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு. அவர் ஒரு தனிச்சிறப்பான பெண் என்று கூறினார். இன்னும் சிலர், ராணி எலிசபெத் அரசு குடும்ப நடைமுறைகளை ஜனநாயக மரபுகளுக்கு ஏற்ப நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தவர் என்று புகழஞ்சலி செலுத்தினர். உலகிலேயே ராணியாக நீண்டகாலம் ஆட்சி செய்த இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ள ராணி எலிசபெத். அவரது மறைவுக்கு உலகமே இரங்கல் தெரிவித்து வருகிறது.
உலகையே உள்ளங்கையில் வைத்து ஆட்சி செய்த பெயர் இங்கிலாந்துக்கு உண்டு. அந்த நாட்டிற்கு 70 ஆண்டுகளாக ராஜ மாதாவாக இருப்பவர் தான் இரண்டாம் எலிசபத் மகாராணி. ஜனநாயகம் தழைத்தோங்கும் காலத்திலும் இங்கிலாந்து ராஜ குடும்பம் மட்டும் வசீகரம் குறையாமல் அப்படியே இருக்கிறது. இதற்கு இரண்டாம் எலிசபத் ராணியின் புரட்சிகளும் காரணம் தான். ராஜா, ராணி மட்டுமே வரி வசூலித்த காலம் போய், அரசாங்கத்திற்கு ராஜ குடும்பம் வரி செலுத்தும் முறையையும் நடைமுறைப்படுத்தினார் இரண்டாம் எலிசபத் ராணி. அதுமட்டுமல்ல தனது மாளிகைக்கு உட்பட்ட பகுதியை தனி நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தபோதும் கூட அதை பொது வாக்கெடுப்பு மூலம் எதிர்கொண்டு சர்வதேச கவனத்தைப் பெற்றார். உணையில் இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபத்துக்கு வானளாவிய அதிகாரங்கள் இருந்தும் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிக்கு தலை வணங்கி வாழ்ந்து வருபவர் எலிசபத் ராணி. எல்லோரையும் ஜனநாயகப்படுத்தும் அவரது அணுகுமுறைக்கு ஜனநாயக நாடுகளிலும் வரவேற்பு உண்டு. அதனாலேயே அவரது மறைவை உலகமே கண்ணீருடன் எதிர்கொண்டுள்ளது.
பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் மறைவையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை மறுநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று துக்கம் அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும், வழக்கமாக தேசிய கொடி ஏற்றப்படும் அனைத்து கட்டிடங்களிலும் துக்க நாளன்று தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எலிசபெத் ராணி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈஃபிள் டவரில் மின் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டது.
ராணியின் ஒரே இருண்ட பக்கம்:
1997ல் இளவரசி டயானா மரணத்தின் போது ராணி எலிசபெத் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். ராணி எலிசபெத்துக்கு அப்போது 70 வயது. அரண்மனையில் இருந்து அதிகாரப்பூர்வமாக இளவரசி மறைவுக்கு இரங்கல் ஏதும் வெளியாகவில்லை. அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படவில்லை. இது அவர் மீது விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதுவே அவர் வாழ்வின் இருண்ட நாட்கள் என்ற பெயரையும் பெற்றது.