Latvia: ஊராடா இது.. கணவர்களை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் மனைவிகள்!
வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவுவதற்காக பல பெண்கள் தங்களது கணவர்களை தற்காலிகமாக வாடகைக்கு விடுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த விகிதாச்சாரம் சராசரி இடைவெளியை விட மூன்று மடங்கு அதிகமாம்.

வடக்கு ஐரோப்பா நாடான லாட்வியாவில் கணவர்கள் வாடகைக்கு விடப்படும் சம்பவம் பெரும் பேசுபொருளாக இணையத்தில் பார்க்கப்படுகிறது.
பாலின விகிதம்
உலகம் முழுவதையும் எடுத்துக் கொண்டால் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் வாழ்கின்றனர். இதில் ஆண், பெண் என கணக்கில் கொண்டால் ஆண்களை விடவும் பல நாடுகளில் பெண்கள் அதிகமாக உள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. பாலின ஏற்றத்தாழ்வு விகிதம் அதிகம் கொண்ட மாநிலங்களில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் 30 வயதைக் கடந்த ஆண்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களை மேலும் கவலைக்குள்ளாக்கும் வகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
வாடகைக்கு விடப்படும் கணவர்கள்
வடக்கு ஐரோப்பா நாடான லாட்வியாவில் பாலின ஏற்றத்தாழ்வு அதிகளவில் உள்ளது. அதாவது அங்கு பெண்களை விட ஆண்கள் குறைவாக உள்ளனர். இதனால் வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவுவதற்காக பல பெண்கள் தங்களது கணவர்களை தற்காலிகமாக வாடகைக்கு விடுகிறார்கள் என நியூயார்க் போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த விகிதாச்சாரம் சராசரி இடைவெளியை விட மூன்று மடங்கு அதிகமாம். 65க்கு மேற்பட்டவர்களில் ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு அதிகம் உள்ளனர்.
பணியிடங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் எங்கு பார்த்தாலும் ஆண்கள் பற்றாக்குறையுடன் இருப்பது தெளிவாக தெரிகிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படி தற்காலிக ஆண்கள் வாடகைக்கு கிடைப்பதால் சிறந்த பாலின சமநிலை தொடர்புகளை ஈடுபாட்டுடன் வைத்திருக்க முடியும். சிலர் ஆண்கள் பற்றாக்குறையால் தங்களது ஜோடியைத் தேடி வெளிநாட்டிற்குச் செல்கிறார்கள்.
இப்படி வாடகை ஆண்களுக்கு என பிரத்யேக வலைத்தளங்களும் உள்ளது. அதன்படி பிளம்பிங், தச்சர், டிவி இன்ஸ்டாலேஷன், பிற பராமரிப்பு பணிகள், திரைச்சீலைகளைச் சரி செய்தல் போன்ற பராமரிப்பு பணிகளை செய்ய விரைவாக வருகிறார்கள். லாட்வியா நாட்டில் பாலின ஏற்றத்தாழ்வுக்கு காரணம் ஆண்களின் குறைந்த ஆயுட்காலம் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. அதிக புகைப்பிடித்தல் மற்றும் ஆண்களின் வாழ்க்கை முறை போன்றவற்றால் அதிக உடல்நல பிரச்னைகளால் அவதிப்படுகிறது. ஆண்களில் 31 சதவிகிதம் பேரும், பெண்களில் 10 சதவிகிதம் பேரும் புகைப்பிடிக்கின்றனர். அதிகமான ஆண்கள் அதிக எடை அல்லது பருமனாக உள்ளனர் என ஆய்வு முடிவுகள் சொல்லப்படுகிறது.
லாட்வியா மட்டுமல்லாமல் இங்கிலாந்திலும் இந்த கணவர்களை வாடகைக்கு விடும் திட்டம் 2022ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மணிக்கணக்கில் தொடங்கி நாள் வரை வாடகை நிர்ணயிகப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





















