மேலும் அறிய

Groundwater extraction: நிலத்தில் உறிஞ்சி எடுக்கப்படும் தண்ணீர்..நிலை குலையும் பூமி..இந்தியா முக்கிய காரணம்?!

நிலத்தடி நீர் அதிகப்படியாக உறிஞ்சி எடுக்கப்படுவதால் பூமியின் சுழற்சியே மாற்றம் கண்டுள்ளதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலத்தடி நீர் அதிகப்படியாக உறிஞ்சி எடுக்கப்படுவதால் பூமியின் சுழற்சியே மாற்றம் கண்டுள்ளதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் ஆதாரம்:

மனிதன் உயிர்வாழ தேவையான அடிப்படை ஆதாரங்களில் நீர் முதன்மையானதாக உள்ளது. அத்தகைய இன்றியமையாத குடிநீரின் பெரும்பகுதி, பூமியில் இருந்து தான் உறிஞ்ச் எடுக்கப்படுகிறது. பன்னெடுங்காலமாக தொடரும் இந்த நடவடிக்கை, தற்போது பூமியின் சுழற்சியையே பாதித்துள்ளது என்ற ஆராய்ச்சியாளர்கள் கூறும் தகவல்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாய்ந்த பூமி:

இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஒன்றியத்தின் நாளிதழான ஜியோ பிஸிக்கல் ரிசர்ச் லெட்டர்சில் வெளியாகி உள்ள ஆய்வு முடிவுகளின்படி, ”மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுத்து பயன்படுத்தி வருவதன் காரணமாக, 1993ம் ஆண்டு முதல்  2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பூமி 80 சென்டிமீட்டர் அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்து உள்ளது. குறிப்பிட்ட  கால கட்டத்தில் மக்கள் 2,150 ஜிகாடன் நிலத்தடி நீரை வெளியேற்றியுள்ளனர். இது 6 மில்லி மீட்டர் (0.24 அங்குலம்) கடல் மட்டத்திற்கு சமமானதாகும். அதேநேரம், சரியான எண்ணிக்கையை மதிப்பிடுவது கடினம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். நிகத்தடி நீரை மறுபகிர்வு செய்வதில் மேற்கு வட அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

புவியின் சுழற்சி:

கடந்த காலங்களில் துருவங்களின் சறுக்கல் கடல் நீரோட்டங்கள் மற்றும் பூமிக்கு அடியில் ஆழமான வெப்பமான பாறைகளின் வெப்ப சலனம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் மட்டுமே மேற்கண்ட மாற்றங்கள் ஏற்பட்டது. ஆனால்,  நிலத்தடி நீரை மறு பகிர்வு செய்வதே இந்த பூமியின் சாய்வுக்கான முதன்மை காரணி என புதிய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. பூமியின் சுழற்சி துருவம் உண்மையில் நிறைய மாறுதல்களை கண்டுள்ளது எனவும் கூறுகின்றனர். நீரின் பங்கு இருப்பதாக கடந்த 2016-ல் கண்டுபிடிக்கப்பட்டது.  நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவது காலநிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.  அதே வேளையில் புவியியல் நேர அளவீடுகளில், துருவ சறுக்கல் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அறிவியல் சொல்லும் கணக்கு:

2016 ஆம் ஆண்டு ஆய்வின்படி, இந்திய துணைக்கண்டமும் காஸ்பியன் கடலும் நிலத்தடி நீரை பெருமளவில் இழந்ததாகவும், இதனால் பூமியின் சுழற்சி அச்சு கிழக்கு நோக்கி நகர்ந்ததாகவும் கூறப்படுகிறது.  2021 ஆம் ஆண்டு புவி இயற்பியல் ஆய்வுக் கடிதங்களில்   வெளியிடப்பட்ட  மற்றொரு  ஆய்வு , 1995 ஆம் ஆண்டில் வட துருவம் கிழக்கு நோக்கி நகர்ந்ததாகவும், 1995-2020 ஆம் ஆண்டில் இந்த சறுக்கல் 1981-1995 இல் இருந்ததை விட கிட்டத்தட்ட 17 மடங்கு வேகமானது என்றும் கூறியது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பல தசாப்தங்களுக்கு நீடித்தால் மட்டுமே பலன் அளிக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget