மேலும் அறிய

Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஹிந்துஜா குடும்பம் சட்டவிரோதமாகப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி சுரண்டலில் ஈடுபட்டதாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

பிரிட்டனில் மிகவும் கோடீஸ்வர பின்னணியைக் கொண்டது ஹிந்துஜா குடும்பம். பிரகாஷ் ஹிந்துஜா, கமல் ஹிந்துஜா, மற்றும் அவர்களது மகன் அஜய் மற்றும் மருமகள் நம்ரதா ஆகியோர் சுவிட்சர்லாந்தில் உள்ள வில்லாவில் வீட்டுப் பணியாளர்களை துன்புறுத்தியதாகவும் தவறாக நடத்தியதாகவும் மனிதக் கடத்தல் வழக்கு தொடரப்பட்டது. குறைந்த ஊதியம், அதிக பணி நேரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடன் இந்த குடும்பத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது.

நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை:

இந்நிலையில் தான் ஹிந்துஜா குடும்பம் சட்டவிரோதமாகப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி சுரண்டலில் ஈடுபட்டதாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இருப்பினும், ஆள்கடத்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறைவான ஊதியம்:

முன்னதாக ஹிந்துஜா குடும்பத்திற்கு எதிராக வாதாடிய அரசு வழக்கறிஞர் யவ்ஸ் பெர்டோசா, ”இந்தியாவைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு அவர்கள் வீட்டில் வளர்க்கும் நாய்க்குச் செலவிடும் தொகையைக் காட்டிலும் மிகக் குறைவான ஊதியமே வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 டாலர் அதாவது ரூபாய் 667 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒருநாள் வேலை என்பது 15 முதல் 18 மணி நேரம்வரை இருக்கும். ஆனால், இவர்களது வளர்ப்பு நாய்க்கு அதை விட அதிகமான தொகையை செலவிட்டுள்ளனர்”என்று ஹிந்துஜா குடும்பத்திற்கு எதிராக குற்றம் சாட்டியிருந்தார்.

இதனிடையே, பிரகாஷ் ஹிந்துஜா, அவரது மனைவி கமல், அவர்களது மகன் அஜய் மற்றும் மருமகள் நம்ரதா ஆகியோர் சுவிட்சர்லாந்தில் சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு அனைத்து மனித கடத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அவர்களுடைய செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஹிந்துஜா குடும்ப உறுப்பினர்கள் எந்த சிறைத்தண்டனையோ அல்லது தடுப்புக்காவலோ சந்திக்கவில்லை என்பதை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தி இருக்கிறார். சுவிஸ் சட்டத்தின்படி, இறுதித் தீர்ப்பு உச்ச அதிகாரத்தால் வழங்கப்படும் வரை குற்றமற்றவர் என்ற அனுமானம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹிந்துஜா குடும்பம்:

ஹிந்துஜா குழுமம் 1914 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள சிந்தி குடும்பத்தைச் சேர்ந்த பர்மானந்த் தீப்சந்த் ஹிந்துஜாவால் நிறுவப்பட்டது.  ஆரம்பத்தில் ஷிகர்பூர் (தற்போதைய பாகிஸ்தான் ) மற்றும் இந்தியாவின் பம்பாயில் இயங்கி , 1919 இல் ஈரானில் நிறுவனத்தின் முதல் சர்வதேச செயல்பாட்டை தொடங்கியது.

குழுமத் தலைவர் ஸ்ரீசந்த் ஹிந்துஜா மற்றும் அவரது சகோதரர் கோபிசந்த் , 1979 இல் ஏற்றுமதி வணிகத்தை மேம்படுத்துவதற்காக லண்டனில் குடியேறினர். மூன்றாவது சகோதரர் பிரகாஷ் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், குழுமத்தின் செயல்பாடுகளை நிர்வகிக்கிறார். இளைய சகோதரர் அசோக் இந்திய நலன்களை மேற்பார்வையிடுகிறார்.

ஆட்டோமொபைல் , எண்ணெய் மற்றும் சிறப்பு ரசாயனங்கள், வங்கி & நிதி , IT மற்றும் ITeS, இணைய பாதுகாப்பு , சுகாதாரம் , வர்த்தகம் , உள்கட்டமைப்பு திட்ட மேம்பாடு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு , சக்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பதினொரு துறைகளில் ஹிந்துஜா குழுமம் பரந்து விரிந்துள்ளது. இங்கிலாந்தின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக ஹிந்துஜா உள்ளது. 38 நாடுகளில் வணிகங்களை நடத்து, ஹிந்துஜாக்களின் சொத்து மதிப்பு சுமார் 47 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN LIVE Score: அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியா - அசத்தும் வங்கதேச பந்துவீச்சாளர்கள்
IND vs BAN LIVE Score: அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியா - அசத்தும் வங்கதேச பந்துவீச்சாளர்கள்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN LIVE Score: அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியா - அசத்தும் வங்கதேச பந்துவீச்சாளர்கள்
IND vs BAN LIVE Score: அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியா - அசத்தும் வங்கதேச பந்துவீச்சாளர்கள்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
Madurai: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு  ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
Embed widget