மேலும் அறிய

ஹமாஸ் அமைப்பினருடன் கைக்கோர்க்கும் ஹிஸ்புல்லா இயக்கம்.. இஸ்ரேலுக்கு எதிரான போரில் புதிய திருப்பம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் முக்கிய எதிரியாக இருப்பது ஹிஸ்புல்லா இயக்கம். இவர்கள் லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மத்திய கிழக்கில் அமைந்துள்ள லெபனான் நாட்டின் தெற்கு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்ததற்கு எதிராக உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஹிஸ்புல்லா இயக்கம். கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரசியல் இயக்கம் ஈரான் நாட்டின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. இந்த இயக்கத்திற்கு முக்கிய ஆதரவாக இருந்து வருவது ஷியா பிரிவு இஸ்லாமிய மக்கள் ஆவர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் முக்கிய எதிரியாக இருப்பது ஹிஸ்புல்லா இயக்கம்தான். ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு, ஆண்டுக்கு லட்சக்கணக்கான டாலர்களை ஈரான் வழங்கி வருவதாக அமெரிக்க குற்றம் சாட்டி வருகிறது.

இஸ்ரேலுக்கு எதிரான போரில் திருப்பம்:

இந்த நிலையில், ஹமாஸ் - இஸ்ரேலுக்கு இடையேயான போரில் ஹமாஸ் அமைப்பினருடன் கைகோர்க்க தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்திருப்பது உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான போர் 8ஆவது நாளை எட்டியிருக்கும் சூழலில், ஹிஸ்புல்லா இயக்கத்தின் துணை தலைவர் நைம் காசிம், இஸ்ரேல் போரில் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

லெபனான் நாட்டில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் பேசிய நைம் காசிம், "ஹிஸ்புல்லாவாகிய நாங்கள் இந்த மோதலுக்கு பங்களித்து வருகிறோம். எங்கள் கொள்கை திட்டத்திற்கு உட்பட்டு தொடர்ந்து பங்களிப்போம். நாங்கள் போரில் பங்கு கொள்ள முழுமையாக தயாராக இருக்கிறோம். நடவடிக்கைக்கான நேரம் வரும்போது, ​​நாங்கள் அதை எடுப்போம்" என்றார்.

ஹமாஸ் அமைப்பினருடன் கைக்கோர்க்கும் ஹிஸ்புல்லா இயக்கம்:

இந்த போரில் ஹிஸ்புல்லா இயக்கம் தலையிடக் கூடாது என சர்வதேச அளவில் அழுத்தம் எழுந்துள்ள நிலையில், அதை ஹிஸ்புல்லா இயக்கம் மறுத்து வருகிறது. இது குறித்து பேசிய நைம் காசிம், "முக்கிய நாடுகள், அரபு நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தூதர்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும், போரில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். அது எங்களை பாதிக்காது. ஹிஸ்புல்லாவுக்கு அதன் கடமைகள் தெரியும்" என்றார்.

இதற்கிடையே, லெபனான் தலைநகர் பெய்ரூட் நகருக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சென்றுள்ளார். ஹமாஸ் அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள், ஆயுதம் ஏந்தி கொண்டு காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளனர். இவர்கள், 1,300 பேரை படுகொலை செய்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானோர் அப்பாவி மக்கள் ஆவர். 

இதற்கு பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், காசாவில் குண்டு மழை வீசி வருகின்றனர். இதில், 1,900 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதில், பெரும்பான்மையானோர் அப்பாவி மக்கள் ஆவர். 600 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  கடந்த சில நாள்களாகவே ஹிஸ்புல்லா இயக்கத்தையும் பாலஸ்தீன கூட்டு இயக்கங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget