பெட்ரோல் பங்கில் டீ விற்றாரா இலங்கை கிரிக்கெட் வீரர்..? நடந்த கதையே வேறு!!
இலங்கையில் பெட்ரோல் பங்கில் நீண்ட வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் டீ வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலானது
தட்டுப்பாடு:
இலங்கை பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் நிலையில், அங்கு பெட்ரோலுக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்காக, பெட்ரோல் பங்கில் மக்கள் மிக நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருக்கின்றனர்.
உடல்நலம்:
இலங்கை மக்கள் மிக நீண்ட வரிசையில் அதிக நேரம் நிற்பதால், வயதான உள்ளிட்ட பலருக்கும் உடல்நிலை பாதிப்புக்கு ஏற்படுகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்:
We served tea and buns with the team from Community Meal Share this evening for the people at the petrol queues around Ward Place and Wijerama mawatha.
— Roshan Mahanama (@Rosh_Maha) June 18, 2022
The queues are getting longer by the day and there will be many health risks to people staying in queues. pic.twitter.com/i0sdr2xptI
இந்நிலையில் மிக நீண்ட வரிசையில் நிற்கும் மக்களுக்கு, இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோசான் மகாநாம உதவி செய்துள்ளார். பெட்ரோல் வாங்குவதற்காக விஜிராமா மவத்தா பகுதியில் நீண்ட நேரமாக வரிசையில் நின்ற மக்களுக்கு, உணவு பொருட்களை வழங்கியுள்ளார்.இது குறித்து சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பகிர்ந்த, இலங்கையில் உள்ள அசாதாரண சூழலை விளக்கியுள்ளார். மேலும், உடல்நிலை முடியாதவர்கள், அருகில் உள்ளவர்களின் உதவியை நாடுமாறு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கிரிக்கெட் வீரர் டீ விற்பதாகவும் செய்தி தவறாக பரவியது. ஆனால் அவர் டீ கொடுத்து உதவி மட்டுமே செய்துள்ளார்.
இந்தியா உதவி:
இந்தியா, இலங்கைக்கு ஆயிரக்கணக்கான டன் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கியது. இருப்பினும், அங்கு பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு குறைந்தபாடில்லை.
Please, look after each other in the fuel queues. Bring adequate fluid and food and if you’re not well please, reach out to the closest person next to you and ask for support or call 1990. We need to look after each other during these difficult times.
— Roshan Mahanama (@Rosh_Maha) June 18, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்