John Cena: ரசிகர்கள் ஷாக்..! 16 முறை சாம்பியன் - WWE போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஜான் சீனா
John Cena: WWE எனப்படும் தொழில்முறை மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜான் சீனா அறிவித்துள்ளார்.
John Cena: WWE எனப்படும் தொழில்முறை மல்யுத்த போட்டிகளில் இருந்து, 2025ம் ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக ஜான் சீனா அறிவித்துள்ளார்.
ஓய்வை அறிவித்த ஜான் சீனா:
World wrestling entertainment எனப்படும் தொழில்முறை மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக, பிரபல வீரரான ஜான் சீனா அறிவித்துள்ளார். வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் wwe போட்டியில் இருந்து முற்றிலும் விலகிவிடுவேன் என தெரிவித்துள்ளார். டோராண்டோவில் நடந்த மனி இன் தி பேங்க் பிரீமியம் லைவ் நிகழ்வின் போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அப்போது ஒரு புதுவிதமான டி-ஷர்ட்டை அணிந்திருந்த ஜான் சீனா, அதில் 'தி லாஸ்ட் டைம் இஸ் நவ்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
கடைசியாக ரெசில்மேனியா போட்டியில் ஜான் சீனா பங்கேற்பார் என கருதப்பட்டது. இருப்பினும், மனி இன் தி பேங்க் மீடியா நிகழ்ச்சியில் பேசிய ஜான் சினா, ரெஸில்மேனியா 41 ஷோ ஆஃப் ஷோ தனது இறுதித் தோற்றமாக இருக்கும் என்றும், டிசம்பர் 2025 வரை மல்யுத்தம் செய்ய இலக்கு வைத்திருப்பதாகவும்” தெரிவித்தார்.
View this post on Instagram
ஜான் சீனாவின் மீதமுள்ள போட்டிகள்:
ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து, நெட்ஃபிளிக்ஸில் முதன்முறையாக ஒளிபரப்பாக உள்ள WWE RAW, ராயல் ரம்பிள் 2025, எலிமினேஷன் சேம்பர் 2025 மற்றும் ரெஸில்மேனியா 41 ஆகிய போட்டிகளில் கடைசியாக ஒருமுறை ஜான் சீனா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
WWE போட்டிகளில் ஜான் சீனாவின் பங்களிப்பு:
2002 ஆம் ஆண்டுஅந்த நிறுவனத்தில் அறிமுகமான ஜான் சீனா, WWE இல் ஹால் ஆஃப் ஃபேம் அங்கீகாரத்தை பெற்றுள்ளார். அந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் ஸ்மாக்டவுன் எபிசோடில் கர்ட் ஆங்கிளின் சவாலுக்கு பதிலளித்தன் மூலம், ஜான் சீனா பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார். பிரபல ராப் பாடகரான 'டாக்டர் ஆஃப் துகானோமிக்ஸ்'-ன் தொடர்ச்சி தான் என அறிவித்துக்கொண்டதும், ரசிகர்களிடையே உடனடியாக பிரபலமானார். மேலும் அவர் தனது வாழ்க்கையில் முதல்முறையாக WWE சாம்பியன்ஷிப்பை வென்றார்.
ஜான் அதன் பிறகு WWE பட்டத்தை மொத்தம் 13 முறையும், உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை 3 முறையும், ராயல் ரம்பிளை 2 முறையும் வென்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஜான் சீனா தனது திரைப்பட வாழ்க்கை காரணமாக, WWE சண்டைகளில் பெரிய அளவில் பங்கேற்காமல் இருந்தார். கடந்த ஆண்டு தனது தொழில்முறை சண்டை வாழ்க்கையில் முதல் முறையாக இந்தியாவிற்குப் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.