மேலும் அறிய

இவர்களின் உதவி இல்லாமல் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி இருக்க முடியாதாம்! வெளியான தகவல்!

அமெரிக்க பங்கு சந்தை வங்கிகள் மற்றும் பங்குதாரர்கள் பலரின் உதவியோடு ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார். ஆனால், ட்விட்டர் நிர்வாகத்திடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த முடிவை ஒத்திவைப்பதாக தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து, ட்விட்டர் தரப்பில் மஸ்க் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை விரைவில் வரவிருந்த நிலையில், ட்விட்டரை நேற்று முழுவதுமாக எலான் மஸ்க் கையகப்படுத்தினார். அதோடு, ட்விட்டர் தலைமை நிர்வாக அலுவலர் பரக் அக்ரவால், சட்ட நிபுணர் விஜய கட்டே, தலைமை நிதி அதிகாரி நெட் சீகல் உள்ளிட்ட நான்கு பேரை பணி நீக்கம் செய்தார்.

ட்விட்டரை வாங்குவதாக அறிவித்த பின்னர், அதிலிருந்து பின்வாங்கிவிட்டு தற்போது அதை அவர் கையகப்படுத்தியிருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, இவ்வளவு பெரிய தொகையை அவர் எப்படி செலுத்தினார் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பட்டு வருகின்றன. 

அதற்கு பதில் அளிக்கும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அமெரிக்க பங்கு சந்தை வங்கிகள் மற்றும் பங்குதாரர்கள் பலரின் உதவியோடு ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் பங்குக்கு ஈடாக புதிய நிறுவனத்தில் தாங்கள் வழங்கிய கடனை மாற்ற அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பங்கு சந்தையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ட்விட்டரின் பங்குகள் விற்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் அது நிறுத்தப்பட்டது. இச்சூழலில், அதற்கு புதிய முதலீட்டாளர்கள் கிடைத்துள்ளனர்.

இளவரசர் அல்வலீத் பின் தலால் 

சவூதி இளவரசர், கிங்டம் ஹோல்டிங் கோ. நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 35 மில்லியன் ட்விட்டர் பங்குகளை மாற்றியுள்ளார். இதன் மதிப்பு, சுமார் 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஒரு ட்விட்டர் பங்கின் விலை 54.20 அமெரிக்க டாலர்கள் ஆகும். அது, அவரை புதிய தாய் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய முதலீட்டாளர் ஆக்கியது.

ஜாக் டோர்சி

ட்விட்டரின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி 18 மில்லியனுக்கும் அதிகமான பங்குகளை அதாவது நிறுவனத்தில் சுமார் 2.4 விழுக்காட்டினை சுமார் 978 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார். இதன் மூலம் ட்விட்டரைக் கட்டுப்படுத்தும் மஸ்க்கின் எக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அவர் பெற்றுள்ளார்.

கத்தார் முதலீட்டு ஆணையம்

கத்தார் அரசுக்கு சொந்தமான நிறுவனம் கத்தார் முதலீட்டு ஆணையம். இதன் துணை நிறுவனம், மஸ்கின் ஹோல்டிங் கம்பெனியின் பங்குகளுக்கு ஈடாக 375 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget