Elon Musk: “இதோ பாருங்கள் என்னால் அதிசயங்களை நிகழ்த்த முடியாது” - எலான் மஸ்க் கொடுத்த பதில் ட்வீட்
எலான் மஸ்க் போட்ட ட்விட்டர் பதிவு மீண்டும் ட்விட்டர் வாசிகள் இடையே வேகமாக வைரலாகி வருகிறது.
ட்விட்டர் நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளையும் பிரபல தொழிலதிபரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமமன எலான் மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாங்கினார். அப்போது முதல் அவர் ட்விட்டர் தளத்தில் போடும் பதிவுகள் மிகவும் வேகமாக வைரலாகி வருகின்றன. அந்தவகையில் அவருடைய கணக்கை போல் பலரும் மார்ஃபிங் செய்து ஒரு சில நகைச்சுவையான விஷயத்தை பதிவிட்டு வருகின்றனர். அப்படி ஒரு பதிவிற்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.
அதன்படி ஒருவர் எலான் மஸ்க் கணக்கை போல் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் அவர் அடுத்து மெக்டோனால்ட் நிறுவனத்தை வாங்கி அங்கு உள்ள ஐஸ்க்ரீம் மெஷின்களை சரி செய்ய போகிறேன் என்று கூறுவது போல பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த எலான் மஸ்க் அந்தப் பதிவை ரீட்வீட் செய்து ஒரு பதிலை அளித்துள்ளார். அதில், “இதோ பாருங்கள் என்னால் அதிசயங்களை நிகழ்த்த முடியாது” எனப் பதிவிட்டுள்ளர். அவரின் இந்தப் பதிவும் வேகமாக வைரலாகி வருகிறது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Listen, I can’t do miracles ok pic.twitter.com/z7dvLMUXy8
— Elon Musk (@elonmusk) April 28, 2022
முன்னதாக இன்று காலை கோகோ கோலா தொடர்பாக அவர் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், 'அடுத்து நான் கோகோ கோலாவை வாங்க போகிறேன். கோகோயினை மீண்டும் கோகோ கோலாவில் சேர்க்க போகிறேன்' எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். இதன் மூலம் கோகோ கோலாவை எலான் மஸ்க் விலைக்கு வாங்க போகிறாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. ஏற்கெனவே ஜாலியாக பேசிக்கொண்டிருப்பதைப் போல ட்விட்டரில் அரட்டை அடித்துக்கொண்டே அதற்கு ஓனராகிவிட்டார் எலான். அதேபோல் தற்போது கோகோ கோலா குறித்து பதிவிட்டுள்ளார். இதன் அடுத்தக்கட்டம் என்னவென்று இணையவாசிகள் ஆவலுடன் பல்வேறு யூகங்களை பதிவிட்டு வருகின்றனர்.
Next I’m buying Coca-Cola to put the cocaine back in
— Elon Musk (@elonmusk) April 28, 2022
அதுமட்டுமின்றி, ட்விட்டர் தொடர்பாகவும் ட்வீட் செய்துள்ளார் எலான், அதில், ''ட்விட்டரில் என்ட் டு என்ட் என்க்ரிப்ஷன் இருக்க வேண்டும், எனவே உங்கள் செய்திகளை யாரும் உளவு பார்க்கவோ அல்லது ஹேக் செய்யவோ முடியாது. பொதுநம்பிக்கை ஏற்படும் வகையில் அரசியல் ரீதியாக ட்விட்டர் நடுநிலையுடன் இருக்க வேண்டும். நடுநிலை என்றால் தீவிர வலதுசாரியோ, தீவிர இடதுசாரியோ கோபப்படுவார்கள்'' எனக் குறிப்பிடுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்