Elon Musk: டெஸ்லா இன்க் நிறுவனத்தின் பங்குகளை விற்றார் எலான் மஸ்க்!
Elon Musk: கடந்த வாரத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், தனது நிறுவனமான டெஸ்லாவின் பங்குகளை விற்றுள்ளார்.
டெஸ்லா இன்க் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லாவின் பங்குகளை விற்றுள்ளார்.
அமெரிக்காவின் Securities and Exchange filings-இன் தகவலின்படி, எலான் மஸ்க் நேற்று டெஸ்லா எலக்ட்ரானிக் நிறுவனத்தின் 4.4 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் விற்றுள்ளார். இது சுமார் 44 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பங்குகள் ஆகும்.
இதன் பின்னர், டெஸ்லாவின் பங்குகள் 12 சதவீதம் சரிவடைந்தது. எலான் மஸ்க் டிவிட்டர் பங்குகளை வாங்கியதற்கு பிறகு, அதன் பங்குகள் ஏற்றத்தில் இருந்தது. டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிவில் வர்த்தகம் ஆகின. டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வந்தபோதே, டெஸ்லா 20 சதவீதம் சரிவடைந்தது.
Elon Musk Sells About $4 Billion In Tesla Shares Ahead Of Planned Twitter Purchase https://t.co/v6bl9aJoQN pic.twitter.com/Cl2COJiU3Q
— Forbes (@Forbes) April 29, 2022
தற்போது டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் எலான் மஸ்க் சார்பில் டிவிட்டர் நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டும். டெல்ஸாவின் பங்குகளை விற்றதன் மூலம், எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்திற்கு 21 பில்லியன் டாலர் அளவுக்கு நிதி வழங்க இருக்கிறது. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு எலான் மஸ்க் தற்போது முதல் முதலான தனது நிறுவனத்தின் பங்குகளை விற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் டிவிட்டர் நிறுவனம் தனது பங்குகளை எலான் மஸ்கிற்கு விற்பதற்கு முடிவு செய்திருந்தது. இதற்கான விலை 44 பில்லியன் டாலர் ஆகும். இதற்காக எலான் மஸ்க் 21 பில்லியன் டாலர் தொகையை இக்விட்டி ஃபினான்ஸ் மூலம் டிவிட்டருக்கு வழங்க இருக்கிறார். மேலும், கூடுதல் 20 பில்லியன் டாலர் தொகையை லோன் மூலம் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No further TSLA sales planned after today
— Elon Musk (@elonmusk) April 29, 2022
உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 268 பில்லியன் டாலர் ஆகும். இனி வரும் காலங்களில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்க திட்டமிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.