வாட்ஸ் அப்பில் ஹார்ட் எமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனை? முழு விவரங்கள் என்ன?
சவூதி அரேபியாவில் ஹார்ட் எமோஜி அனுப்பினால் சிறைத்தண்டனை வழங்கப்படும் என செய்தி ஒன்று தீயாகப் பரவி வருகிறது. அது உண்மையா? முழு விவரங்கள் என்ன...?
சவூதி அரேபியாவில் ஹார்ட் எமோஜி அனுப்பினால் சிறைத்தண்டனை வழங்கப்படும் என செய்தி ஒன்று தீயாகப் பரவி வருகிறது. அது உண்மையா? முழு விவரங்கள் என்ன...?
சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்த சைபர் க்ரைம் வல்லுநர் ஒருவர் வாட்ஸ் அப் செயலியில் பிறருக்கு `ஹார்ட்’ எமோஜி அனுப்பினால், அனுப்பியவரைச் சிறையில் அடைக்க முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி அரேபியாவின் சட்டத்தைப் பொருத்த வரையில், அவ்வாறு அனுப்பியவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 முதல் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் அல்லது 1 லட்சம் சவூதி ரியால் அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஆண்டி ஃப்ராட் அசோசியேஷன் என்ற அமைப்பைச் சேர்ந்த அல் முதாஸ் குத்பி என்பவர், வாட்ஸ் அப் செயலியில் ஒருவருக்கு அதிகளவில் சிவப்பு வண்ண ஹார்ட் எமோஜி அனுப்புவது அவர்களுக்குத் தொந்தரவு அளிக்கும் செயல் எனவும், அது, ஆன்லைன் சேட்டில் சில படங்களையும், வெளிப்பாடுகளையும் பயன்படுத்தி தொந்தரவு மேற்கொள்கிறார் என பாதிக்கப்பட்டவர்களால் புகார் அளிக்கப்படும் பட்சத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் குற்றமாக அமையும் எனச் சுட்டிக் காட்டியுள்ளார் அல் முதாஸ் குத்பி.
தொடர்ந்து அவர் வாட்சாப் முதலான உரையாடல் செயலிகளில் பிறரின் அனுமதி இல்லாமல், அவர்களுடன் உரையாடுவது, அவர்களது விருப்பமின்றி தவறான வகையில் உரையாடல்கள் மேற்கொள்வது, ஆபாசமான படங்களையோ, பிற வெளிப்பாடுகளையோ அனுப்புவது, அதிகளவில் சிவப்பு ஹார்ட் எமோஜி அனுப்புவது ஆகியவற்றில் இருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
`தற்போதைய பாலியல் தொந்தரவு எதிர்ப்பு அமைப்பின் கீழ், பாலியல் தொந்தரவு என்பது பாலியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சொல், செயல், நடவடிக்கை ஆகியவற்றையும், ஒரு நபர் மற்றொரு நபரைத் தொடுவது, அவரது கண்ணியத்திற்குக் குறைவு ஏற்படுமாறு நடந்து கொள்வது ஆகியவற்றையும், நவீன தொழில்நுட்பங்களிலும் இவ்வாறு செயல்படுவதையும் உள்ளடக்குகிறது. அங்குள்ள சமூக மரபுகளின் படி, சிவப்பு ஹார்ட், சிவப்பு ரோஜா முதலான எமோஜிகள் பாலியல் உள்ளடக்கங்களைக் கொண்டிருப்பதால் அவற்றிற்கும் இது பொருந்தும்’ என அல் முஆதாஸ் குத்பி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரங்கள் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவ்வாறு மெசேஜ் அனுப்பியவர் சிறைக்கு அனுப்பப்படுவார். இந்த வழக்கில் 1 லட்சம் சவூதி ரியால்களுக்குக் குறைவான அபராதம், 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஆகியவை வழங்கப்படும். தொடர்ந்து இதே குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 லட்சம் சவூதி ரியால் அபராதம், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஆகியவை வழங்கப்படும்.
சவூதி அரேபியாவில் பாலியல் தொந்தரவைத் தடுக்கும் வகையில் அதிகளவில் ஹார்ட் எமோஜி அனுப்பி தொந்தரவு செய்யும் நபர்கள் மீது புகார் அளிக்கப்படும் போது மட்டுமே இது குற்ற நடவடிக்கையாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.