வெப்பத்தில் உயிர்களை காவு வாங்கும் மரண பள்ளத்தாக்கு
வெப்ப நிலையில் உயிர்களை காவு வாங்கும் மரண பள்ளத்தாக்கு பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம். அப்படிஒரு பள்ளதாக்கு அமெரிக்காவில் இன்றும் இருக்கிறது.
பள்ளத்தாக்குகள் நாம் ரசிக்கவும், குதூகலிக்கவும் என்று தான் இத்தனை நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் பள்ளாத்தாக்குகளிலும் பயங்கரமானவை இருக்கின்றன. அதுவும் பெயரிலேயே பயங்கரம் இருந்தால் சொல்லவா வேண்டும். அப்படி ஒன்று தான் மரண பள்ளத்தாக்கு.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நொவாடா என்கிற இடத்தின் அருகே உள்ளது இந்த மரண பள்ளத்தாக்கு. கடல் மட்டத்திலிருந்து 190 அடி கீழே அமைந்துள்ளது. உலகிலேயே அதிக வெப்பம் உள்ள பகுதியாக கருதப்படும் இந்த பள்ளத்தாக்கில் கோடை காலத்தில் அதிகபட்சமாக 132 பாரன்ஹீட் அதாவது 55 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவுகிறது. அதாவது தற்போது சென்னையில் வீசி வரும் வெயிலை விட ஒரு மடங்கு அதிகம். இதனாலேயே அப்பகுதி, மக்கள் வசிக்கும் பகுதி என்கிற தகுதியை இழந்துள்ளது. இருப்பினும் பாரம்பரியமாக அங்கு வசிக்கும் 24 பேர் இன்றும் வசித்து வருகின்றனர்.
கோடை காலம் வந்துவிட்டால் முதலில் அங்கிருந்து இடம்பெயர்வது அவர்கள் தான். கோடை முடிந்த பிறகே அவர்கள் ஊர் திரும்புகிறார்கள். அப்படி என்ன கொடூர வெயில் என ஆவலாய் பார்க்க வருபவர்கள் தான், வெயிலில் சிக்கி தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டம் பிடிக்கின்றனர். இப்படி தான் அந்த பகுதிக்கு மரண பள்ளத்தாக்கு என பெயர் வந்தது.
அங்கு வைக்கப்பட்டுள்ள மெகா தெர்மா மீட்டர் தான் அப்பகுதியின் வெப்ப அளவை கணக்கிடுகிறது. அதை காண்பதற்காகவே சுற்றுலா பயணிகள் மரண பள்ளத்தாக்கிற்கு வருகின்றனர். அங்கு செல்பி எடுத்து செல்வதற்குள் அவர்கள் படும் பாடு தான் அந்த பள்ளத்தாக்கில் சிறப்பாக பார்க்கப்படுகிறது. வெப்பம் தாங்க முடியாமல் பலர் சுருண்டு மடிந்து போயிருக்கிறார்கள். இப்போது தெரிகிறதா ‛மரண’ பள்ளத்தாக்கின் மகிமை .