Sri Lanka: இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு
இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றுள்ளார்.
இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்று கொண்டுள்ளார். அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் தினேஷ் குணவர்தன பிரதமராக பதவியேற்றுள்ளார்.
மூத்த அரசியல்வாதியான தினேஷ் குணவர்தன, வெளியுறவுத்துறை, கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், இவரை உள்துறை அமைச்சராக அப்போதைய அதிபர் கோட்டபய ராஜபக்ச நியமித்தார். ராஜபக்சவின் நீண்ட கால ஆதரவாளரான தினேஷ் குணவர்தன நாடாளுமன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
Dinesh Gunawardena appointed as New Prime Minister of Sri Lanka https://t.co/9xnZ2Jxlt4
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 22, 2022
முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களுடன் இன்று புதிய அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது. அனைத்து கட்சி அரசை அமைக்க எதிர்கட்சி ஒத்துழைப்பு தரும் வரை பழைய அமைச்சரவையே தொடரும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மக்கள் கோபத்திற்கு உள்ளான ராஜபக்ச அரசுடன் இணைந்த காரணத்தால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்று வந்தது.
இச்சூழலில், கொழும்பு காலிமுகத் திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கையகப்படுத்தப்பட்டு இருந்த அதிபர் அலுவலகமும், வளாகமும் பாதுகாப்பு தரப்பினரால் மீட்கப்பட்டுள்ளது. 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை பெரும் எண்ணிக்கையிலான பாதுகாப்பு மற்றும் காவல்துறை தரப்பினர் காலி முகத்திடல் பகுதிக்குள் நுழைந்தனர். காலிமுகத்திடல் வீதியின் இரு மருங்கிலும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களை அப்புறப்படுத்தியதுடன் அதிபர் செயலகத்தில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களையும் கோட்டாகோகம ஆர்ப்பாட்டப் பகுதிக்குள் அனுப்பி வைத்ததாக தெரிய வந்துள்ளது.
Sajith condemns cowardly attack against protesters https://t.co/5fym0X0hNi
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 22, 2022
இந்த சம்பவங்களின்போது சில ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த சிலரும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினரும் ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தியது தொடர்பாக சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்