மேலும் அறிய
Advertisement
சீன ஆய்வு கப்பலின் இலங்கை வருகை குறித்து வெளிவரும் மாறுபட்ட தகவல்கள் என்னென்ன?
இலங்கை அரசு மீண்டும் அந்த கப்பல் இலங்கையை நோக்கி வருவதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாகவே ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
இலங்கைக்கு வருவதாக இருந்த சீன ஆய்வு கப்பலின் வருகை பிற்போடபட்டிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இலங்கை அரசு மீண்டும் அந்த கப்பல் இலங்கையை நோக்கி வருவதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாகவே ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
இந்த சீன கப்பலின் இலங்கை வருகை குறித்து இலங்கை அரசு தரப்பில் இருந்து மாறுபட்ட கருத்துக்கள் அவ்வப்போது வெளிவந்தம் வண்ணமே இருக்கின்றன.சீன கப்பலின் இலங்கை வருகையை பிற்போடவேண்டும் என இலங்கை அரசு விடுத்துள்ள வேண்டுகோளை ,சீன அரசுடன் ஆலோசனை நடத்தி பதிலளிப்பதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சீன தூதுவருக்கும் இலங்கை அதிபருக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் ஆய்வுக் கப்பல் தமது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என இந்தியா , இலங்கை அரசிடம் முறையிட்டுள்ள நிலையில் , சீன கப்பலின் இலங்கை வருகை அந்நாட்டு அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சீன கப்பலுக்கான அனுமதியை இலங்கையின் வெளிவிவகார அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும், துறைமுக அதிகார சபையும் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.எனினும் இந்த சீன கப்பலின் வருகை குறித்த தகவல் தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும், இது குறித்து இந்தியா விளக்கம் கேட்டிருப்பதாகவும் இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. நேற்றைய தினம் குறித்த சீன கப்பல் இலங்கையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்ததாக கூறப்படும் நிலையில் தற்போது
இந்தோனேசியாவின் நடுக்கடலில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது .
அதேபோல் சீனாவின் விஞ்ஞான ஆய்வுக்கு கப்பல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தன ,எரிபொருள் நிரப்புவதற்காகவும் ,பிற தேவைகளுக்காக குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இந்தியா மற்றும் சீனாவின் நலன்களுக்கு பாதகமாக இலங்கை ஒருபோதும் செயல்படாது என அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்
இந்தியா சீனா இடையில் எந்த பாதிப்பும் ஏற்படும் வகையில் இலங்கை அரசு செயல்படாது என அவர் தெரிவித்திருக்கிறார். ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை சீன உளவுக் கப்பலான யுவான் வாங் - 5 11 ஆம் தேதி வந்தடையவுள்ளது. அதேபோல், கப்பலோ அதன் பணியாளர்களோ இலங்கையை மையப்படுத்தி வேறு எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டார்கள் என போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சீன கப்பலின் ஹம்பாந்தோட்டை வருகை குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இரு நாடுகளுக்கும் ராஜதந்திர மட்டத்தில் விளக்கமளித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆகவே சீனாவின் விண்வெளி ஆய்வு கப்பல் யுவான்வாங் 5, எதிர்வரும் 11ஆம் தேதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு திட்டமிட்டப்படி பயணிக்கும் என கூறப்படுகிறது.
பின்னர் 17ஆம் தேதி அங்கிருந்து புறப்படும் என இலங்கை உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கின்றன. சீனாவின் அழுத்தத்துக்கு இலங்கை அதிபர் அடிபணிய வேண்டிய நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதலால் சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் தற்போது 90% சீன நிதியால் சீனாவின் ஒத்துழைப்பால் உருவாக்கப்பட்டதாகும் .ஆகவே அதன் உரிமம் தற்போது சீனாவிடம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. ஆதலால் சீனா அந்த துறைமுகத்தை தற்போது பயன்படுத்திய வருவது தெரிய வந்திருக்கிறது.
சீனக் கப்பலின் வருகையால் இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்புக்கு அச்சம் எழுந்திருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது .
ஆதலால் இந்திய பெருங்கடல் பகுதியைச் சீன கப்பல் பயன்படுத்த வேண்டிய ஒரு நிலையும் ஏற்பட்டிருக்கிறது .ஆகவே இந்த சீன கப்பலின் பயணம் குறித்த தகவல்கள் இன்னும் இறுதியாக வில்லை என சொல்லப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion