Lebanon Clashes: லெபனான் முகாமில் வன்முறை: 6 பேர் உயிரிழப்பு - அச்சத்தில் வெளியேறும் அகதிகள்: நடப்பது என்ன?
லெபனானில் அகதிகள் முகாமில் ஏற்பட்ட வன்முறையில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Lebanon Clashes: லெபனானில் அகதிகள் முகாமில் ஏற்பட்ட வன்முறையில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா, பாலஸ்தீன் ஆகிய நாடுகளில் பொருளாதார பாதிப்பு காரணமாக பலர் தங்கள் சொந்த நாட்டை விட்டு புலம் பெயர்ந்து அகதிகளாக வெளியேறும் அவலம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டில் 10க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்கள் இயங்கி வருகின்றன. இந்த அகதிகள் முகாம்களில் 50 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் இருப்பதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அண்டை நாடான சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரால் அங்கு இருந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களும் லெபனான் முகாமில் வாழ்கின்றனர்.
அங்கு மிகப் பெரியது ஜன் எல்-ஹில்வே (Ain el-Hilweh) என்ற முகாம். இந்த முகாம் சிடான் என்ற பகுதியிலும் இயங்கி வருகிறது. இப்பகுதி லெபனான் பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளதால், அங்குள்ள அகதிகளின் பாதுகாப்பை அவர்கள் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்நிலையில், அங்கு திடீரென வன்முறை மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
பதா இயக்கத்தினரால் நடத்தப்பட்டு வந்த ஐன் எல், ஹில்வே என்ற இந்த முகாமில் அடிக்கடி வன்முறை போக்கு ஏற்பட்டு வருகின்றன. கடந்த 7 ஆம் தேதி முதல் முகாமில் மோதல்கள் தீவிரமடைந்த வருகின்றன. இதேபோல் கடந்த ஜூலை மாதம் இறுதியில் நடைபெற்ற வன்முறையில் கூட முகாமின் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
Breaking🚨 Lebanon🇱🇧
— Izlamic Terrorist (@raviagrawal3) September 8, 2023
Ain al-Khilweh, Lebanon: Clashes broke out last night, leaving at least 20 injured. pic.twitter.com/kUx0r7fiTf
இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய இந்த மோதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய மோதலால் அந்த முகாமில் இருக்கும் பலர் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள மசூதிகள், பள்ளிகள், சிடான் நகராட்சி கட்டடங்கள் ஆகியவற்றில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும், சிலர் அங்கிருந்து வெளியேறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. லெபானில் 55 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட அகதிகள் இருப்பதாக ஐ.நா அமைப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Vietnam Fire Accident: 9 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து.. வியாட்நாமில் 50 பேர் பலி என தகவல்
Libiya: கோரம்.. லிபியாவில் தாக்கிய புயல்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000-ஆக அதிகரிப்பு..