மேலும் அறிய

Vietnam Fire Accident: 9 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து.. வியாட்நாமில் 50 பேர் பலி என தகவல்

வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள 9 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள 9 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தீ விபத்து:

நள்ளிரவில் ஏற்பட்ட தீ உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 70 பேர் வரை மீட்கப்பட்ட நிலையில், 54 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த கட்டடத்தில் 150 பேர் வசித்து வந்ததாக கூறப்படும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Iphone 15 Series: ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸில் உள்ள புதிய அம்சங்கள் என்ன? டைப் சி-சார்ஜர் உள்ளிட்ட அப்டேட்கள் இதோ..

பயங்கர தீ விபத்து:

ஹனோய் நகரில் ஏற்பட்டது ஒரு பயங்கர தீ விபத்து என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகலான பகுதியில் அந்த கட்டடம் அமைந்துள்ளதால் மீட்பு பணிகளை துரிதமாக செய்யமுடியவில்லை என கூறப்படுகிறது. அதோடு, உள்ளே இருந்தவர்கள் தீ விபத்து போன்ற அவசர காலங்களில் தப்பிப்பதற்கும் அந்த கட்டடத்தில் எந்த வசதிகளும் இல்லை என கூறபப்டுகிறது.  குறுகலான பாதை காரணமாக விபத்து நேர்ந்த இடத்தில் இருந்து 300 முதல் 400 மீட்டர் தூரத்திலேயே தியணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. இதனால், உடனடியாக விரைந்து தீயை அணைக்க முடியாமல் தவித்தனர். 

மேலும் படிக்க: Apple Watch: ஆப்பிள் நிறுவனத்தின் அல்ட்ரா 2, சீரிஸ் 9 வாட்ச் அறிமுகம்..புதிய அம்சங்கள், விலை விவரங்கள் உள்ளே

தொடரும் விபத்துகள்:

வியட்நாமில் சமீபத்திய ஆண்டுகளில் பல கொடிய தீ விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக பிரபலமான கரோக்கி பார்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்களில் இந்த விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. ஓராண்டுக்கு முன், ஹோ சி மின் நகரின் வர்த்தக மையத்தில் உள்ள மூன்று அடுக்கு கரோக்கி பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். அந்த தீ விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். தீ விபத்து தொடர்பாக பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அதன் விளைவாக, அதிக ஆபத்துள்ள அனைத்து இடங்களையும் ஆய்வு செய்ய பிரதமர் உத்தரவிட்டார். 2018 ஆம் ஆண்டு ஹோ சின் மின் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீப்பிடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். முன்னதாக 2016 ஆம் ஆண்டு ஹனோய் கரோக்கி மைதானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர்  உயிரிழந்தனர். இந்த நிலையில் தான் தலைநகர் ஹனோயில் மீண்டும் ஒரு மோசமான தீ விபத்து ஏற்பட்டு, 50 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget