மேலும் அறிய

Rahul Gandhi: ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு.. மணிப்பூர் குறித்து பேசப்பட்டதா?

கடந்த ஜூலை மாதம், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மணிப்பூர் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பெல்ஜியம் சென்றுள்ளார். டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நாளை தொடங்க உள்ள நிலையில், ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. பெல்ஜியமில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களை சந்தித்து பேசினார்.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு:

இந்த சந்திப்பின்போது, மணிப்பூரில் நிலவி வரும் சூழல், அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் பற்றி பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மணிப்பூர் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ பதிவேட்டில் ராகுல் காந்தியின் சந்திப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால், ராகுல் காந்தியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி என ஐரோப்பிய எதிர்க்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் ராகுல் காந்தி, வெளிநாடு வாழ் இந்தியர்களை சந்தித்து பேசுகிறார்.

ஜி20 உச்சி மாநாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் கார்கேவை அழைக்காதது ஏன்?

இந்த நிலையில், பெல்ஜியமில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது. ஜி20 உச்சி மாநாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படாதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து அவர், "இதில் முரண் என்ன இருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவரை அழைப்பதில்லை என முடிவு செய்துள்ளனர். அது உங்களுக்கு ஒன்றை சொல்கிறது.

இந்தியாவின் 60 சதவிகித மக்கள் தொகையின் தலைவரை அவர்கள் மதிப்பதில்லை என்று அது உங்களுக்குச் சொல்கிறது. இதை, மக்கள் சிந்திக்க வேண்டும். இதைச் செய்ய வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? அதற்குப் பின்னால் என்ன வகையான சிந்தனை இருக்கிறது?" என்றார்.

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு:

உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவது குறித்து பேசிய அவர், "உரையாடுவதற்கு ஜி20 அமைப்பு ஒரு முக்கியமான அமைப்பு என்று நான் நினைக்கிறேன். அதை இந்தியா நடத்துவது நல்ல விஷயம். நிச்சயமாக, இந்தியாவில் பல பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், இதை வைத்து அவர்கள் செய்யும் அனைத்தையும் அனுமதிக்க முடியாது" என்றார்.

உக்ரைன் விவகாரம் குறித்து பேசிய அவர், "ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலில் இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் ரஷ்யாவுடன் உறவு வைத்திருக்கிறோம். அரசாங்கம் தற்போது முன்வைத்துள்ள நிலைப்பாட்டை விட எதிர்கட்சிக்கு வேறு நிலை இருக்காது என நான் நினைக்கின்றேன்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget